Tuesday, March 22, 2011

அதிமுக கூட்டணியில் வைகோ இல்லை!

அதிமுகவுடன் கூட்டணியில் மதிமுக இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 41,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 12, இந்திய கம்யூனிஸ்டுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஏனைய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது போக மீதமுள்ள 160 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது.

அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகள் அடங்கிய பட்டியலை இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

இதனால், அதிமுக கூட்டணியில் வைகோ இடம்பெறப்போவது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment