சட்டப்பேரவைத் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.
உடல் நலமில்லாத தன்னுடைய தாய் மாரியம்மாளை சந்திப்பதற்கு பாளை வந்த வைகோ, பின்னர் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றார்.
அங்கு இன்று காலை மதிமுக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், "மதிமுக நிலைபாடு குறித்து ஏற்கெனவே விவரமாக தெரிவித்துவிட்டேன். 2001-ல் திருச்சியில் நடந்த கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இன்று இயற்கையாகவே நடந்துவிட்டது.
தமிழகத்தில் இனி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக அமையும். இந்த முறை மதிமுக தேர்தலில் போட்டியிடாமல் வெளியே இருந்து கவனிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்த தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை," என்றார் வைகோ.
No comments:
Post a Comment