"நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்று மதிமுக மாநில அரசியலமைப்பு குழு உறுப்பினர் நிஜாம் கூறினார்.
இதுதொடர்பாக அவர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாளையங்கோட்டை தொகுதியில் படித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக பணிகளில் நாங்கள் ஈடுபட்டதால் என்னைப் பாளை தொகுதியில் தனியாக போட்டியிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் கட்சி எடுத்த முடிவை மீறி நான் போட்டியிட விரும்பவில்லை.
அதிமுகவில் எங்களுக்கு அவமானமும், அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. இனி ஒருபோதும் அந்தக்க் கூட்டணியில் சேரமாட்டோம். அந்தக் கட்சியில் எங்களுக்குக் கிடைத்த அவமானத்தால், அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நெல்லை மாவட்டம்தான்.
தொண்டர்களின் யோசனையை வைகோ ஏற்றுக்கொண்டு உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என அறிவித்துவிட்டார். எங்களைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றியதால் இழப்பு அதிமுகவிற்குதான். அதற்காக அதிமுகவுக்குத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம். அதற்காக எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக நாங்கள் பிரசாரம் செய்யமாட்டோம். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று எங்கள் தொண்டர்களுக்குத் தெரியும். அதை சரியாக அவர்கள் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment