Tuesday, March 22, 2011

ஜெ. உருவ பொம்மை எரிப்பு: வைகோ கண்டிப்பு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்த சம்பவத்துக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தைகளில் மதிமுக மிகுந்த கண்ணியத்தையும் அமைதியான போக்கையும் கடைபிடித்து வருகிறது.

லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து, கழகத்துக்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தாம்பரத்திலும், தேனி மாவட்டத்திலும் நான்கு, ஐந்து பேர் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை கொளுத்தியதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இத்தகைய செயல்களில் கழக தோழர்கள் ஈடுபடக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment