Tuesday, March 22, 2011

மதிமுகவுடன் அதிமுக சமரச முயற்சி: வைகோவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு

மதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக, அதிமுக சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதிமுகவின் தேர்தல் குழுவில் உள்ள மூத்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோடையன் ஆகியோர் இன்று காலை மதிமுக தலைமையகமான தாயகத்துக்கு விரைந்தனர். அங்கு வைகோவை சந்தித்து அவர்கள் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பாக வைகோவுடன் அவர்கள் பேசியிருக்கின்றனர்.
இந்நிலையில், வைகோ தலைமையில் இன்று நடைபெறும் மதிமுக உயர் நிலைக்குழு கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

அதிமுக அளிக்க முன்வந்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment