Thursday, March 24, 2011

பதுங்குவது பாய்வதற்குத்தான் : வைகோ ஆவேசம்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார்.

அவர்,  ’’சட்டசபையில் மதிமுக பிரதிநிதிகள் இடம் பெறுவதை ஸ்டெர்லைட் நிர்வாகம் தடுக்கிறது.   மதிமுகவுக்கு எதிராக மாற்றுக்கட்சிகளுக்கு பணம் கொடுக்கிறது ஸ்டெர்லைட்.
 
ஸ்டெர்லைட் ஆலையை எதித்து மதிமுக வழக்கு தொடுத்திருப்பதால்  ஸ்டெர்லைட் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்று பேசினார்.

அவர் மேலும்,  ’’தேர்தலை புறக்கணிக்கும் முடிவிலிருந்து மதிமுக ஒரு போதும் பின்வாங்காது.  தேர்தலை கண்டு பயந்து ஓடவில்லை.  பதுங்குவது பாய்வதற்குத்தான்’’ என்று ஆவேசமாக பேசினார்.

No comments:

Post a Comment