Wednesday, July 13, 2011

தென் சூடான் உருவானது போல தமிழீழம் உருவாக வேண்டும் - வைகோ


இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள சி.டி.க்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, கல்லூரி மாணவர்களுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தெற்கு சூடான் நாடு புதிதாக உருவாக்கப்பட்டது போல மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று அவர் கூறினார்.

இலங்கையில் நடந்த போரில் ராணுவத்தால் தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகளை பதிவு செய்து தயாரிக்கப்பட்ட சி.டி.க்களை கல்லூரி மாணவர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வழங்கி வருகிறார்.

சென்னை - தாம்பரத்தில் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வாயிலில் செவ்வாய்க்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் சி.டி.க்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ, "ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த லட்சக்கணக்கான குறுந்தகடுகள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குறுந்தகடுகளை பார்த்து விட்டு சாப்பிட முடியாது; தூங்க முடியாது; கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது.

சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது; பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட அவலம்; தமிழ் இளைஞர்கள் அம்மணமாக இழுத்து வரப்பட்டு கண்கள் கட்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தினர் எட்டி மிதித்து சுட்டு படுகொலை செய்கின்ற கோரக்காட்சிகள்; உண்மையில் நடைபெற்ற சம்பவங்கள்.

அதில் இசைப்பிரியா என்ற இளநங்கை சிங்கள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பதை ஆங்கில தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதை சிங்கள ராணுவம் மறுத்துள்ளது.

இந்த காட்சிகள் போலிக்காட்சிகள்; புலிகள் அதை செய்தார்கள் என்ற சகிக்க முடியாத பொய்யை சிங்கள ராணுவ பிரதிநிதி கூறியுள்ளார். சிங்கள பெண்ணிடம் விடுதலைப்புலிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக இது வரை எந்த குற்றச்சாட்டையும் சிங்களவர்கள் கூட சொன்னதில்லை.

நம் தொப்புள் கொடி உறவுகள் இப்படி கொல்லப்பட்டார்களே என்பதை மாணவர் சமுதாயம் அறிந்து கொள்ள காணொலியை ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நேரில் சந்தித்து கொடுத்துள்ளேன்.

மாணவர் சமுதாயத்தினருக்கு நான் கேட்பதெல்லாம் இந்த குறுந்தகடுகளை உங்கள் சக்திகேற்ப பிரதி எடுத்து மற்றவர்களுக்கு தாருங்கள். ஒவ்வொருவரும் இதை செய்தால் கோடிக்கணக்கான மக்களிடம் இந்த செய்தியை கொண்டு சேர்க்க முடியும்.

நிச்சயமாக இந்த படுகொலைகளை செய்தவன் தப்ப முடியாது. குழந்தைகளையும், பெண்களையும், இளைஞர்களையும் படுகொலை செய்தவன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவது உறுதி. கொலைகார ராஜபக்ஷே கூட்டம் தண்டிக்கப்படுவது உறுதி.

இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வுதான். சுதந்திர தமிழ் ஈழ தேசம்தான் தீர்வு. பொது ஜன வாக்கெடுப்பின் மூலமாக தெற்கு சூடான் உருவானது போல தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்பதை உலகநாடுகள் முன்வைக்க வேண்டும்," என்றார் வைகோ


Thursday, June 30, 2011

பிரஸ்ஸல்ஸ் பிரகடனம்: வைகோ உரை - வீடியோ


ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் ஈழ மக்கள் அவையின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'ஈழப் பிரச்னை' குறித்த மாநாடு, ஜூன் 1-ல் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ்சில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை, வீடியோ வடிவில்:



நன்றி... மதுரைக்காரன்

Tuesday, June 28, 2011

கடல் அலை ஓய்ந்தாலும் மதிமுகவின் மக்களுக்கான போராட்டம் ஓயாது : வைகோ


மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் இன்று மாலை (28.6.2011) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.

அவர்,  ‘’விலை வாசி உயர்வு மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத அரசு என்பதை
நிரூபித்திருக்கிறது.   இவர்கள் உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைந்திருந்த காலத்தில் கூட இங்கு விலைவாசியை குறைத்தது இல்லை. இப்போதும் அதே காரணத்தைதான் சொல்கிறார்கள்.  கச்சா எண்ணை .உயர்ந்ததால் டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியதாக சொல்லுகிறார்கள்.

ஆனால் இவர்களுடைய நோக்கம் பெரு முதலாளிகளும், தனியார் எண்ணை நிறுவனங்களும், லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே துணை போகிறார்கள்.

இன்னும் சிலர் சொல்லுகிறார்கள்.  விலையை குறைக்க வேண்டும் என்றூ சொல்லுகிறார்கள்.   ஆனால்,  இந்த விலையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பதே மதிமுகவின் கோரிக்கை.

இதனால் நடுத்தர மக்களும் தினக்கூலியாக உழைப்பவர்களூம்,  பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

 மற்ற மாநிலங்களில் விலைவாசியை கட்டுப்படுத்தியை அரசுகள் போல் தமிழகத்திலும் செய்வார்கள் என்று
நம்புகிறோம்.

கடல் அலை ஓய்ந்தாலும் மதிமுகவின் மக்களுக்கான போராட்டம் ஓயாது.   தமிழக மக்களுக்கு எந்த
பிரச்சனை நடந்தாலும்  அங்கு மதிமுக தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழக மக்களுக்காக மதிமுக கடைசிவரை போராடிக்கொண்டே இருக்கும்’’ என்று பேசினார்.

நன்றி... நக்கீரன்

Friday, May 20, 2011

ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது: வைகோ ஆவேசம்


திண்டிவனம்: ""ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ம.தி.மு.க., மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி இல்லத் திருமணம் @நற்று நடந்தது. விழாவில் வைகோ பேசியதாவது: சென்னையில், வரும் 28ம் தேதி ம.தி.மு.க., பொதுக் கூட்டம் நடக்கிறது. கூட்டு குடும்பத்தில் எத்தனை கோடி ரூபாய் சேர்த்தாலும், ஒற்றுமை இல்லை என்றால் நிம்மதி இருக்காது. அரசியல் குடும்பங்கள் சிலவற்றில் நிம்மதி இல்லை. இது திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலக்கட்டம். ம.தி.மு.க.,விற்கு மட்டுமல்ல, அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் இது சோதனையான காலக்கட்டம். திராவிட இயக்கங்கள் நசித்து போக முயற்சி நடக்கிறது.

ஆளும் கட்சியை தேர்தலில், மக்கள் தூக்கி எறிந்ததற்கு பல காரணங்கள் உண்டு. ஐந்தாண்டுகள் ம.தி.மு.க., பல போராட்டங்களை நடத்தியது. ஆளும் கட்சிக்கு எதிராக பலமான பிரசாரம் செய்தது. தன்மானத்துடன், சுயமரியாதையுடன் தேர்தல் களத்திலிருந்து விலகி நின்றதை தமிழக மக்கள் சரி என்று கூறினர். எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கி கொண்டு தேர்தலில் நில்லுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். குமுதம், ஆனந்த விகடன், "தினமலர்' வாசகர்கள் கருத்து கணிப்பில், ம.தி.மு.க., முடிவு சரி என்று எப்படி பதிவு செய்தனர். மக்கள் நம்மை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் நேர்மையானவர்கள், கொள்கையுடையவர்கள். இவர்கள் வளர்வது நல்லது என, மக்கள் எண்ணுகின்றனர். இதுதான் கட்சிக்கு அடித்தளம். ம.தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது. நமக்கு வர வேண்டிய சோதனைகள் எல்லாம் வந்து சென்று விட்டன. பூஜ்யத்திற்கு கீழே எதுவும் எடுக்க முடியாது. இனி நமக்கு வெற்றி தான். அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் எங்கள் மீது பாசம் வைத்துள்ளனர். தமிழகத்தை காக்க ம.தி.மு.க., எல்லா வகையிலும் போராடும். இவ்வாறு வைகோ பேசினார்.

நன்றி..தினமலர்

Monday, May 2, 2011

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!

பொங்கித் தீர்த்த வைகோ

சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்​ கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.


அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.

இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.

இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.

ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும்,  தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!

- தி.கோபிவிஜய்.. ஜூனியர் விகடனுக்காக.
படம்:   அ.ரஞ்சித்

நன்றி... ஜூனியர் விகடன்

Wednesday, April 20, 2011

ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்!


'உலகக் கோப்பையை இந்தியா​விடம் இழந்த ஆத்திரத்தில், தமிழக மீனவர்​கள் நால்வரின் உயிரைப் பறித்து​விட்டது இலங்கைக் கடற்​படை!’ என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து, கடந்த 17.4.11 இதழில் எழுதி இருந்தோம். விக்டஸ் என்ற மீனவர் உடல் மட்டும் இலங்கையில் கரை ஒதுங்கிய நிலையில், மற்ற மீனவர்களின் உடல்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அந்தோணிராஜ் உடலும், 14-ம் தேதி கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஜான்பால் உடலும் கிடைத்தன. இரண்டு நாட்கள் கழித்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து உடலும் தொண்டி கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியது. அதாவது கொன்று, கொண்டுவந்து போட்டுள்ளார்கள். சூடு குறையாத நேரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தங்கச்சிமடம் வந்திருந்தார் வைகோ. 

முதலில் விக்டஸின் வீட்டுக்குச் சென்றார். விக்டஸின் மனைவி கிங்ஸ்டாவும், அவரது மூன்று வயது மகள் பெரிலும் கதறி அழ, வைகோவின் கண்களிலும் கண்ணீர்.


\''உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும், அதன் மூலம் கிடைக்கும் கஞ்சியைக்கூட நிம்மதியாகக் குடிக்க முடியாத நிலையில் நம் மீனவர்கள் உள்ளனர். நாம் எவ்வளவுதான் போராட்டம் நடத்தி​னாலும், நம் மீனவர்களை சிங்களன் கொன்றுகொண்டே இருக்கிறான். உங்களுடைய துக்கத்திலும் கண்ணீரிலும் பங்கெடுக்கவேவந்து இருக்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். வேலைக்குப் போன அப்பா திரும்பி வருவார் என நினைத்துக்கொண்டு இருக்கும் இந்தக் குழந்தையினை நன்றாகப் படிக்கவையுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. ஆனாலும் என்னால் முடிந்த சிறு உதவி'' என சொல்லி 25 ஆயிரத்தை விக்டஸின் மகளிடம் கொடுத்தார்.

அடுத்து ஜான்பால் வீட்டுக்குச் சென்றார் வைகோ. ஜான்பாலுக்கு நான்கு குழந்தைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்துள்ளன. யாருமே இன்னும் ஐந்து வயதை எட்டவில்லை. எதுவுமே அறியாத அந்தக் குழந்தைகள் சூழல் புரியாமல் அப்பாவுக்கு காரியங்களைச் செய்துகொண்டு இருப்பதைக் கண்ட வைகோ கண்கள் சிவக்க, அந்தக் குழந்தைகளைத் தூக்கி அணைத்து கண்ணீர் விட்டார். இந்த நெகிழ்வு அங்கு கூடியிருந்த பெண்களையும் தொற்றிவிட, அனைவரும் வாய்விட்டு அழுதனர். ஜான்பாலின் மனைவி ஜெனிட்டாவுக்கு ஆறுதல் கூறிய வைகோ, அவரிடமும் நிதி அளித்தார்.

இறுதியாக அந்தோணிராஜ் வீட்டுக்குச் சென்ற வைகோவிடம் சகாயம் என்ற பெண், ''காலங்காலமா கடலை நம்பியே வாழுற எங்க புள்ளைங்களோட கதியைப் பாத்தீங்களா? இலங்கைக்காரன் கொன்னு போட்ட நாலு பேரோட குடும்பத்தைப் பாருங்க. புருஷனைப் பறிகொடுத்துட்டு நிக்கிற எங்க புள்ளைகளைப் பாருங்க அய்யா. இந்த கொடுமைக்கு எப்பத்தான் முடிவு வருமோ...'' என்று கதறினார். 19 வயதில் கணவனை இழந்த சோகத்தையும், தனது இரண்டு வயது மகள் ரிமிலாவின் எதிர்காலத்தையும் நினைத்துச் சுருண்டுகிடந்த அந்தோணிராஜின் மனைவி சாலியோவிடம், 'காலம்தான் உன் கண்ணீரைத் துடைக்கும்’ என்ற வைகோ, அவருக்கும் 25 ஆயிரத்தை வழங்கினார். அப்போது, ''சாலியோ ப்ளஸ் டூ படிச்சிருக்கு. அவ​ளுக்கு டீச்சர் டிரெய்னிங் படிக்க ஏற்பாடு செஞ்சா, அவ வாழ்க்கைக்கு உதவியா இருக்கும்’ என சிலர் சொன்னார்கள். உடனடியாக அதனை ஏற்றுக்கொண்ட வைகோ, 'இப்போதே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று, டீச்சர் டிரெய்னிங் ஸீட் வாங்குவதற்கான நன்கொடை, படிப்புச் செலவு அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார், வைகோ.

கண் கலங்கி நின்ற வைகோ, ''நம் மீனவர்கள் தாக்கப்படும்போது எல்லாம், இந்திய பிரதமரின் கவனத்துக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் கொண்டுசெல்வேன். அவரும், இனி அப்படி நடக்காது என பதில் அளிப்பார். ஆனால் மறு நாளே, நம் மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்​படுவார்கள். 30 வருடங்களாக இந்தத் தாக்குதல் நடந்துகொண்டே இருக்கின்றன. இலங்கை அரசைக் கண்டித்தோ, ராஜ்ய உறவுகளைத் துண்டிப்போம் என்றோ இந்திய அரசு எச்சரித்தது இல்லை. மாறாக ராஜபக்ஷேவை காமன் வெல்த் போட்டிக்கும், கிரிக்கெட் போட்டிக்கும் அழைத்து மரியாதை செய்கிறார்கள். திருப்பதியில் பூரண கும்ப மரியாதை கொடுக்கிறார்கள். ராஜபக்ஷே இந்தியாவில் இருந்த அன்றைய இரவில்தான், இந்தக் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. இந்திய அரசு... தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது...'' என்று கொந்தளித்தார்.

இதுவே, இறுதி நிகழ்வாக இருக்கட்டும்!

இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

நன்றி: ஜூனியர் விகடன்

Tuesday, April 19, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டு இளைஞரொருவர் தீக்குளித்து தற்கொலை

இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தமிழ்நாட்டு வாலிபரொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்திலுள்ள சீகம்பட்டி பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது வாலிபரான கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியியலாளர் ஒருவரே அவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ஈழத் தமிழ் மக்களுக்குத்  தொடர்ச்சியாக நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின் அவர் தன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தீமூட்டிக் கொண்டு வீதி வழியாக ஓடிச்  சென்ற போது அவரது பெற்றோர் பின்னாலேயே ஒடிச் சென்று தீயை அணைக்க முயன்றுள்ளனர். முடியாமற் போன பின்பு தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு
நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:
அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

வைகோ நேரில் அஞ்சலி
இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, "தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர் தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்காவது இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்," என்றார்.

மேலும் பேசிய வைகோ, "இளைஞர்களே போராடுங்கள், ஆனால் தயவுசெய்து உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியின் குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.

nanri: தமிழ்வின்

Friday, April 15, 2011

மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்



ராமேஸ்வரம்: ""இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் நான்கு பேரின் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் ,''என, ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 2ல் மீன்பிடிக்க சென்று படகுடன் காணாமல் போன நான்கு மீனவர்களில் விக்டஸ் உடல் இலங்கை கடற்கரை, ஜான்பால், அந்தோணிராஜ் உடல்கள் தொண்டி கடற்கரையில் ஒதுங்கின. இவர்களுடன் சென்ற மீனவர் மாரிமுத்துவின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. பலியான மீனவர்கள் வீட்டிற்கு வந்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ , உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். மீனவர்களின் குடும்பத்திற்கு கட்சி நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கிய அவர்,""அந்தோணிராஜ் மனைவி சாலியாவை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்வதற்கான செலவை தானே ஏற்று கொள்வதாக ,'' தெரிவித்தார். மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், இளைஞர் அணி துணை செயலாளர் கார்கண்ணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் பேட்ரிக், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன்(ராமநாதபுரம்) சண்முக சுந்தரம்(விருதுநகர்) செவந்தியப்பன் (சிவகங்கை) பூமிநாதன் (மதுரை) சந்திரன்(தேனி) மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: மீனவர்கள் பலியான சம்பவம் நடந்த ஏப்.2 ல் இரவில், மீன்பிடித்த மீனவர்களிடம்," கிரிக்கெட்டில் இலங்கை தோற்றால் நடப்பதே வேறு ,' என, இலங்கை கடற்படையினர் மிரட்டியுள்ளனர். அன்று இரவுதான் நான்கு மீனவர்களும் காணாமல் போனர். இவர்களை இலங்கை கடற்படையினர்தான் கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். தமிழக மீனவர்களுக்கு நடுக்கடலில் நடக்கும் கொடுமையான உயிரிழப்புகளை தடுக்க ,மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து, இலங்கை அரசுக்கு மத்திய அரசு எவ்வித எச்சரிக்கையும் செய்யவில்லை. யாழ்பாணத்தில் மீட்கப்பட்ட மீனவர் விக்டசின் உடலில் 16 இடங்களில் காயம் இருந்ததாக அடையாளம் காண சென்ற உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட மீனவர்களின் ஒருவருக்கு ஒரு கை வெட்டப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இதிலிருந்தே நால்வரையும் இலங்கை கடற்படையினர் கொலைசெய்துள்ளது உறுதியாகிறது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலை நீடித்தால்,"" இந்திய அரசு எங்கள் அரசு இல்லை'' என, தமிழக மக்கள் கூறும் நிலை உருவாகும் , என்றார்.

நரிக்குடி: நரிக்குடி அருகே ஒட்டங்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார். கடந்த வாரம் ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயினர். இவர்களில் மூன்று பேரின் உடல் கிடைத்தது. மாரிமுத்து என்ன ஆனார் என்று தெரியவில்லை. இவரது குடும்பத்திற்கு ம.தி.மு.க., செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் வழங்கினார். விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க., செயலாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நன்றி..தினமலர்

Monday, April 11, 2011

ஸ்டெர்லைட்.. தர்மயுத்தம் தொடரும்: வைகோ



சென்னை, ஏப்.8,2011

பொதும‌க்க‌ள் நலனை‌ப் பாதுகா‌க்க, ஸ்டெ‌‌ர்லை‌ட் ந‌ச்சு ஆலையை அக‌ற்று‌ம் போரா‌ட்ட‌த்தை‌த் த‌ர்மயு‌த்தமாகவே தொட‌ர்வோ‌ம் எ‌ன்று ம‌திமுக பொது‌ச் செயல‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ‌அ‌றி‌க்கை‌யி‌ல், "தூ‌த்து‌க்குடி நகர‌‌த்தை அடு‌த்து ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌ம் அமை‌த்து உ‌ள் நாசகார ந‌ச்சு ஆலையான தா‌மிர உரு‌க்கு ஆலை ‌நில‌ம், ‌நீ‌ர், கா‌ற்று அனை‌த்தையு‌ம் ந‌ச்சு‌த்த‌ன்மை உடையதா‌க்‌கி, ‌விவசா‌யிக‌ள், ‌‌மீனவ‌ர்க‌ள், பொதும‌க்க‌ள் அனைவ‌ரி‌ன் வா‌ழ்‌வையு‌ம் பாழா‌க்‌கி, உ‌யிரு‌க்கே ஊறு ‌விளை‌வி‌க்கு‌ம் நோ‌ய்களையு‌ம் ஏ‌ற்படு‌த்துவதோடு, வேளா‌ண் ‌விவசாய ‌நில‌‌ங்களையு‌ம் பா‌ழ்படு‌த்‌தி கட‌ல்வா‌ழ் உ‌யி‌ரின‌ங்களு‌க்கு‌ம் பெரு‌ங்கேடு ‌விளை‌வி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல் இ‌ந்த ஆலை அக‌ற்ற‌ப்பட வே‌‌ண்டு‌ம் எ‌ன்று கட‌ந்த 15 ஆ‌ண்டுகளாக ம‌.தி.மு.க போராடி வரு‌கிறது.

‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையை ‌நிர‌ந்தரமாக அக‌ற்றுவத‌ற்கு ‌ரி‌ட் மனுவை செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து நானே வாதாடினே‌ன். கட‌ந்த செ‌ப்‌ட‌‌ம்ப‌ர் 28ஆ‌ம் தே‌திய‌ன்று ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையை ‌நிர‌ந்தரமாக மூட உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்தது. அதை எ‌தி‌ர்‌த்து ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடு‌த்து த‌ற்கா‌லிகமாக தடை ஆணையு‌ம் பெ‌ற்றது. அதை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நானே வழ‌க்கு தொடு‌த்து வாதாடினே‌ன்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையா‌ல் சு‌ற்று‌‌ச்சூழ‌ல் எ‌ந்த அள‌வில‌் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்பதை ஆ‌ய்வு செ‌ய்து அ‌றி‌க்கை தரு‌ம்படி நா‌க்பூ‌ரி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய அர‌சி‌ன் தே‌சிய சு‌ற்று‌ச்சூழ‌ல், பொ‌றி‌யிய‌ல் ஆரா‌ய்‌ச்‌சி ‌நிறுவன‌த்‌தி‌ற்கு (‌நீ‌ரி) உ‌த்தர‌வி‌ட்டது. வழ‌க்கு தொடு‌த்தவ‌ன் எ‌ன்ற முறை‌யி‌ல் நானு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் மாசுக‌ட்டு‌ப்பா‌ட்டு வா‌ரியமு‌ம், த‌மி‌ழ்நா‌ட்டி‌ன் மாசு க‌ட்டு‌ப்பா‌ட்டு வா‌ரியமு‌ம் ப‌ங்கே‌ற்கு‌ம் ‌வி‌த‌த்‌தி‌ல் ஆ‌ய்வு நட‌த்த‌ப்பட வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், 8 வார கால‌த்‌திற‌்கு‌ள் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அ‌ந்த ஆ‌ய்வு அ‌றி‌க்கை தர‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌னவு‌ம், கட‌ந்த ‌பி‌ப்ரவ‌ரி 25ஆ‌‌ம் தே‌தி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்தது.

ஆனா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்த 40வது நா‌ளி‌ல்தா‌ன் ‌நீ‌ரி ‌நிறுவன‌ம் ஆ‌‌ய்வு நட‌த்த ஏ‌‌ப்ர‌ல் 6ஆ‌ம் தே‌திய‌ன்று வருகை த‌ந்தது. ‌நீ‌ரி‌யி‌ன் சா‌ர்‌பி‌ல் டி.ந‌ந்‌தி தலைமை‌யி‌ல், டி.‌ஜி.கா‌ஜ்கா‌ட்டே, ஏ.எ‌ன்.வை‌த்யா, ஏ.டி.பனா‌ர்‌க்க‌ர், எ‌ம்.‌பி.பா‌ட்டீ‌ல், கா‌ர்‌த்‌தி‌க், ஆ‌ர்.‌‌சிவகுமா‌ர் ஆ‌கிய ஏழு பே‌ர் கொ‌ண்ட ‌நிபுண‌ர் குழு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌‌ர். ‌நிபுண‌ர் குழு‌வினரு‌ம், ‌ம‌த்‌திய, மா‌நில மாசு க‌ட்டு‌ப்பா‌ட்டு அ‌திகா‌ரிகளு‌ம் 6ஆ‌ம் தே‌தி ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் ஆ‌ய்‌வினை‌த் தொட‌ங்க மு‌னை‌ந்தன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ப‌ங்கே‌ற்க‌ச் செ‌‌ன்ற எ‌ன்னை ம‌ட்டு‌ம் அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், எ‌ன்னுட‌ன் வேறு யாரையு‌‌ம் அனும‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்று‌ம் ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் கடுமையாக வாதாடியது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் வாதாடு‌ம்போதே உத‌வி செ‌ய்வத‌ற்கு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உட‌ன் இரு‌ப்பதை‌ப் போல, இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் என‌க்கு உதவுவத‌ற்காக எ‌ன்னுட‌ன் 4 பேரை அனும‌தி‌க்க வே‌ண்‌டு‌ம் எ‌ன்று ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு‌வின‌ரிட‌ம் நா‌ன் வ‌ற்புறு‌த்‌திய‌தி‌ன்பே‌ரி‌ல் சு‌ற்று‌ச்சூழ‌ல் ‌நிபுணரான ‌நி‌த்‌தியான‌ந்த‌ன் ஜெயரா‌‌மு‌ம், ம.‌தி.மு.க. ச‌ட்ட‌த்துறை செயல‌ர் வழ‌க்க‌றிஞ‌ர் தேவதா‌‌ஸ், தராசு மகாராச‌ன், ஜா‌க்ச‌ன் தாம‌ஸ் ஆ‌கியோ‌ர் ஆ‌‌ய்‌வி‌ன்போது உட‌ன் இரு‌க்க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன்போது ‌‌ஸ்டெ‌ர்லை‌ட் வளாக‌த்த‌ி‌லு‌ம், சு‌ற்று வ‌ட்டார‌த்‌திலு‌ம், ‌நில‌த்‌தி‌ன் ‌மீது‌ம், ‌நில‌த்‌தி‌ன் அடி‌யி‌லு‌ம் உ‌ள்ள ‌நீரையோ, ம‌ண்ணையோ சோ‌தி‌ப்பத‌‌ற்கு மா‌தி‌‌ரிகளை எடு‌க்க‌ப் போவ‌தி‌ல்லை எ‌ன்று‌ம், இ‌‌னி ஒருமுறை வ‌ந்துதா‌ன் சோதனை‌க்கு மா‌தி‌ரிக‌ள் எடு‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு தெ‌ரி‌வி‌த்தபோது நா‌ன் கடுமையாக ஆ‌ட்சே‌பி‌த்தே‌ன். உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றி‌வி‌த்த 10 நா‌ட்களு‌க்கு‌ள் ‌நீ‌ங்க‌ள் வ‌ந்து இரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல், 40 நா‌‌ள் க‌ழி‌த்து வ‌ந்து இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள். இத‌ற்கு‌ள் ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌ம் ப‌ல்வேறு ஏமா‌ற்று வேலைகளை இ‌ங்கே செ‌ய்து இரு‌க்‌‌கி‌ன்றது.

மேலு‌ம் பல உ‌ண்மைகளை மூடி மறை‌க்க ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌த்‌திற‌்கு வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்க ‌நீ‌ங்க‌ள் முய‌ல்‌கி‌றீ‌ர்கள‌். எனவே, வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு‌க்காக நட‌த்த‌ப்படு‌ம் இ‌ந்த ஆ‌ய்‌வி‌‌ல் நா‌ன் கல‌ந்து கொ‌ள்ள மா‌ட்டே‌ன். இதனை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்றத‌்‌திலும‌் த‌ெ‌ரி‌‌வி‌ப்பே‌ன் என‌க் கூ‌றினே‌ன். இத‌‌ன் ‌பி‌ன் ‌‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு ‌நீரையு‌ம், ம‌ண்ணையு‌ம் சோதனை‌க்கு மா‌தி‌‌ரி எடு‌‌க்க ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. ஆனா‌ல் ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌ள் ‌நீரையு‌ம், ம‌ண்ணையு‌ம் சோ‌தி‌ப்பத‌ற்கு ந‌ா‌ங்களு‌ம் மா‌தி‌ரிக‌ள் எடு‌க்க வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்றபோது ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் அடியோடு மறு‌த்ததா‌ல் ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு எ‌ங்களை அனும‌தி‌க்க‌வி‌ல்லை.

கா‌ற்று ம‌ண்டல‌ம் மாசுபடுவதை‌ச் சோ‌தி‌க்கு‌ம் உபகர‌ண‌ங்களையு‌ம் கொ‌ண்டு வர‌வி‌ல்லை. நா‌ங்க‌ள் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று‌ம், அடு‌த்தமுறை வரு‌ம்போது அத‌ற்கு ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று‌ம்‌‌ ‌நிபுண‌ர் குழு‌வின‌ர் சொ‌ன்னா‌ர்க‌ள். ஆனா‌ல், உ‌ண்மை‌யி‌ல் கா‌ற்‌றி‌ல் கல‌க்கு‌ம் ந‌ச்சு‌த்த‌ன்மையை‌க் க‌ண்டு அ‌றியு‌ம் உபகர‌ண‌ங்க‌ள் ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌ள் ஒரு வாகன‌த்த‌ி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டு இரு‌ந்தது. பக‌ல் 12 ம‌ணியள‌வி‌ல் அ‌ந்த வாகன‌ம் வெ‌ளி‌யி‌‌ல் அனு‌ப்ப‌‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது.

நெரு‌ப்பாக‌க் ‌த‌கி‌க்கு‌ம் வெ‌‌யி‌லி‌ல் பக‌ல் 12 ம‌ணி‌க்கு ஆ‌ய்வு தொட‌‌ங்‌கியது. ‌ஸ்டெ‌ர்லை‌ட் தொ‌ழி‌ற்சாலைக‌்கு‌ள் ‌பிற‌்பக‌ல் 3 ம‌ணி‌ வரை ஆ‌ய்வு நட‌த்த‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் 4 ம‌ணி‌க்கு ஆ‌ய்வு ‌‌மீ‌ண்டு‌ம் தொட‌ங்‌‌கியது. ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌‌க்கு வெ‌ளி‌யி‌ல் உ‌ள்ள இட‌ங்களான தெ‌ற்கு ‌வீரபா‌ண்டியாபுர‌ம், ‌மீள‌வி‌ட்‌டா‌ன், ‌சி‌ல்வ‌ர்புர‌ம் ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் ‌நில‌த்தடி ‌நீரு‌ம், ‌கிண‌ற்கு ‌நீரு‌ம் ஆ‌ய்வு‌க்கு‌ச் சோனை‌க் குடுவைக‌ளி‌ல் சே‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.

ஸ்டெ‌ர்லை‌ட் ந‌ச்சு ஆலையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விவசா‌யிக‌ள், ‌மீனவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தர‌ப்பு கரு‌த்துகளை‌க் கூற ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் வாசலுக‌்கு எ‌திரே கா‌த்து இரு‌ப்பதாகவு‌ம், அவ‌ர்களையு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌‌ண்டு‌ம் என நா‌ன் வ‌ற்புறு‌த்‌திய‌தி‌ன்பே‌ரி‌ல் 7ஆ‌ம் தே‌தி காலை 10 ம‌ணி‌க்கு ச‌ந்‌தி‌ப்பதாக ‌நிபுண‌ர் குழு தெ‌ரி‌‌வி‌த்து இரு‌ந்தது. 7ஆ‌‌ம் தே‌‌தி காலை‌யி‌ல் 9.50 ம‌ணி‌க்கு பேரா‌சி‌ரியை பா‌த்‌திமா பாபு தலைமை‌யி‌ல் ‌விவசா‌யிக‌ளு‌ம், ‌மீனவ‌ர்களு‌ம், ‌கிராம‌த்து‌த் தா‌‌ய்மா‌ர்களு‌ம் ‌திர‌ண்டு இரு‌ந்தன‌ர். ஆனா‌ல் 11.15 ம‌ணி வரை‌யிலு‌ம் ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு அ‌ங்கு வர‌வி‌ல்லை. இத‌ற்கு இடை‌யி‌ல் ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் த‌ங்களு‌க்கு ஆதரவாக‌க் கரு‌த்துகளை‌க் கூற, ஆலை‌யி‌ல் வேலை பா‌ர்‌க்‌கிற நப‌ர்களை கொ‌ண்டு ‌சில ஆ‌ட்களை ஏ‌ற்பாடு செ‌ய்து இ‌ரு‌ந்தது.

அவ‌ர்களு‌ம் ஆலை‌யி‌ன் வாசலு‌க்கு எ‌தி‌ர்புர‌‌ம் ஒரு ஓரமாக ‌நி‌ன்று இரு‌ந்தா‌ர்க‌ள். 11.15 ‌ம‌ணி‌க்கு வருகை த‌ந்த ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு தலைவ‌ர் ந‌‌ந்‌தி ‌கி‌ல்ப‌ர்‌ன் கெ‌மி‌க்க‌ல் ஆலை‌யிலு‌ம், ரமே‌ஷ் ‌பிளவ‌ர் ஆலை‌யிலு‌ம் ஆ‌‌ய்வு செ‌ய்து ‌வி‌ட்டு ‌வ‌ந்ததாகவு‌ம் அதனா‌ல் காலதாமத‌ம் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம் கூ‌றினா‌ர். ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ல் ஆ‌ய்வு நட‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்து இரு‌க்‌கிறது. ஆனா‌ல், இ‌ந்த இர‌ண்டு இட‌ங்க‌ளிலு‌ம் ஆ‌ய்வு நட‌த்துவதை என‌க்கு ஏ‌ன் ‌நீ‌ங்க‌ள் தகவ‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கே‌ட்டத‌ற்கு அவ‌ர்க‌ள் உ‌ரிய ‌விள‌க்க‌ம் தராம‌ல் வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர் ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ன் மு‌ன் ‌நி‌ன்ற ம‌க்க‌‌ளிட‌ம் கரு‌‌த்து‌க் கே‌‌ட்குமாறு நா‌ன் கூ‌றியதை ஏ‌ற்று‌க் கொ‌ண்டு, தா‌ய்மா‌ர்க‌ளிட‌ம் ‌நிபுண‌ர் குழு கரு‌த்து கே‌ட்டது. குடி‌த‌ண்‌ணீ‌ர் அடியோடு த‌ங்க‌ள் பகு‌தி‌‌யி‌ல் கெ‌ட்டு‌ப் போ‌ய்‌வி‌ட்டது எ‌ன்று‌ம், ஓடைக‌ளி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்கு‌ம் ஆடுக‌ள் தொட‌ர்‌ந்து உ‌யி‌ர் இழ‌ந்தன எனவு‌ம், தோ‌ல் நோ‌ய்க‌ளு‌ம், வேறு பல நோ‌ய்களு‌ம் த‌ங்களை‌ப் பா‌தி‌ப்பதையு‌ம், ‌விவசாய‌ம் அடியோடு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டதாகவு‌ம் கூ‌றினா‌ர்க‌ள்.

ஆலை‌க்கு ஆதரவாக‌ கரு‌த்து கூற வ‌ந்த‌வ‌ர்க‌ளிட‌மு‌ம் கரு‌த்துகளை கே‌ட்க வே‌‌ண்டு‌ம் எனவு‌ம் ‌நிபுண‌ர் குழு‌விட‌ம் நா‌ன் சொ‌ன்னே‌ன். ‌பி‌ன்ன‌ர் ‌‌நிபுண‌ர் குழு அ‌ங்கு செ‌ன்று கரு‌த்துகளை க‌ே‌ட்டது. பக‌ல் 12 ம‌ணியள‌வி‌ல் ‌ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை‌யி‌ல் ஆ‌ய்வு தொட‌ங்‌கி ‌பி‌ற்பக‌ல் 3.30 ம‌ணி‌ வரை‌யிலு‌ம் நடைபெ‌ற்றது. ‌நீரு‌ம், சேறு‌ம், ம‌ண்ணு‌ம் சோதனை‌க்காக மா‌தி‌ரி‌க் குடுவைக‌ளி‌ல் சே‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டது. ஆ‌ய்வு 3வது நாளாக ஏ‌ப்ர‌ல் 8ஆ‌ம் தே‌தி அ‌ன்று‌ம் மு‌ற்பக‌லி‌ல் நடைபெ‌ற்றது. இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன்போது ஆ‌ய்‌வி‌ல் உ‌ள்ள குறைபாடுகளை எழு‌த்து மூலமாகவே ‌நிபுண‌ர் குழு‌வின‌ரிட‌‌ம் த‌ந்து உ‌‌ள்ளே‌ன். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன்போது, இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மாவ‌ட்ட செயல‌ர் மோக‌ன்ரா‌‌ஜ், மா‌ர்‌க்‌‌‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌யி‌ன் மாவ‌ட்ட செய‌லர் கனகரா‌ஜ் ஆ‌‌கியோரு‌ம் உட‌ன் இரு‌ந்தன‌ர்.

நா‌க்பூ‌ர் ‌நீ‌ரி ‌நிறுவன‌ம் 1998ஆ‌ம் ஆ‌ண்டு ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை சு‌ற்று‌ப்புற‌ச் சூழலு‌க்கு‌ம், ‌நில‌ம், ‌நீ‌ர், கா‌ற்று ம‌ண்டல‌த்‌தி‌ற்கு‌ம் பெரு‌ம் நாச‌ம் ‌விளை‌வி‌க்கு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு அ‌றி‌க்கை த‌ந்து இரு‌ந்தது. ‌நிலைகுலைய‌ர் நே‌ர்மையாள‌ர் டா‌க்ட‌ர் க‌ண்ணா ‌நிறுவ‌னத்‌தி‌ன் ஆணையராக இரு‌ந்தா‌ர். 1999ஆ‌ம் ஆ‌ண்டி‌‌ல் ‌நீ‌ரி ‌நிறுவன‌ம் ஸ்டெ‌‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌த்‌தி‌ற்கு வளை‌ந்து கொடு‌த்தது. 2003 ஆ‌‌ம் ஆ‌ண்டி‌ல் ஸ்டெ‌‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌திற‌்கு ஆதரவாக ஆ‌ய்வு அ‌றி‌க்கை த‌ந்து த‌‌ன் ந‌ம்பக‌த்த‌ன்மையை இழ‌ந்தது.

ஆனா‌ல், ‌மீ‌ண்டு‌ம் 2005‌‌ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் மு‌ன்பு கொடு‌த்த ஆ‌ய்வு ‌அ‌றி‌க்கை‌க்கு முர‌ண்ப‌ட்டு ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலையா‌ல் சு‌ற்று‌ச்சூழ‌ல் மாசுபடு‌கிறது எ‌ன்ற கரு‌த்துகளையு‌ம் கூ‌றியது. இ‌ந்த‌ப் ‌பி‌ன்ன‌ணி‌‌யி‌ல்தா‌ன் த‌ற்பொழுது‌ம் ‌நீ‌‌ரி ‌நிறுவன‌ம் இ‌ந்த ஆ‌ய்வை மே‌ற்கொ‌ண்டு இரு‌க்‌கிறது. ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை மரா‌ட்டிய மா‌நில‌த்‌தி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டு, பொதும‌க்க‌ள், ‌விவசா‌யிக‌ள் நட‌த்‌திய போரா‌ட்டதா‌ல் அ‌ந்த மா‌நில அரசு கொடு‌த்த லைசெ‌ன்சை ர‌த்து செ‌ய்தது.
1994ஆ‌‌‌ம் ஆ‌ண்டி‌ல் அ.இ.‌அ.தி.மு.க ஆ‌ட்‌சி‌யி‌‌ன்போது த‌மிழக அர‌சி‌ன் அனும‌தி பெ‌ற்று இ‌ந்த ஆலை தொட‌ங்க‌ப்ப‌ட்டது. போபா‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ஆலை ‌விப‌த்தா‌ல் ந‌ச்சுவாயு பட‌ர்‌ந்து ம‌னித உ‌யி‌ர்க‌ள் ப‌லியானது போல, ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் ந‌ச்சு‌த்த‌ன்மையா‌ல் கட‌ல்வா‌ழ் உ‌யி‌ரின‌ங்களு‌‌ம், ‌விவசாய ‌நில‌ங்களு‌ம் நாசமாகு‌ம். நோ‌ய்க‌ள் உ‌யி‌ர்களை அ‌ழி‌க்கு‌ம். இ‌ந்த ஆலை மூட‌ப்ப‌ட்டாலு‌ம் இத‌ன் ந‌ச்சு‌த்த‌ன்மை சு‌ற்று வ‌ட்டார‌த்‌திலு‌ம் பல ஆ‌ண்டுகளு‌க்கு ‌நீடி‌க்கவே செ‌ய்யு‌ம். அமெ‌ரி‌‌க்கா‌வி‌ல் ஒரு தா‌‌மிர ஆலை மூட‌ப்ப‌ட்டு நூறு ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌‌ம் அ‌ந்த வ‌ட்டார‌த்‌தி‌ல் ந‌ச்சு‌த்த‌ன்மை ‌நீ‌ங்க‌வி‌ல்லை எ‌ன்பது ஒரு அபாய அ‌றி‌‌வி‌ப்பு ஆகு‌ம்.

இ‌‌ந்த ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் ‌நிறுவன‌ர், உலக‌க் கோடீ‌ஸ்வர‌ர்க‌ளி‌ல் ஒருவரான அ‌னி‌ல் அக‌‌ர்வா‌ல், கோடி‌க்கண‌‌க்‌கி‌ல் கொ‌ள்ளையடி‌க்க ஒ‌ரிசா மா‌நில‌த்த‌ி‌ல் க‌னிம வள‌ங்களை‌க் கப‌ளீகர‌ம் செ‌ய்து அ‌ங்கு வாழு‌ம் பழ‌ங்குடி ம‌க்க‌ள் ஆயுத‌ம் ஏ‌ந்த‌ச் செ‌ய்து மாவோ‌யி‌ஸ்டுகளாக மாற‌க் காரணமானவ‌ர். பொதும‌க்க‌ள் நலனை‌ப் பாதுகா‌க்க, ஸ்டெ‌‌ர்லை‌ட் ந‌ச்சு ஆலையை அக‌ற்று‌ம் போரா‌ட்ட‌த்தை‌த் த‌ர்மயு‌த்தமாகவே ந‌ம்‌பி‌க்கையுட‌ன் தொட‌ர்வோ‌ம்," எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

Thursday, April 7, 2011

ஸ்டெர்லைட்: 2ம் நாளாக வைகோ ஆய்வு


சென்னை, ஏப்.7,2011

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீரி எனும் நிறுவனம் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தியது.

இந்நிறுவனத்தின் நிபுணர் குழுவுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் இணைந்து சுற்றுச்சூழல் கேடு குறித்து ஆய்வுசெய்தார். முன்னதாக, ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதால் அதை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது ஆலையை முழுமையாக மூட வேண்டும் என வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் கழிவுகள் குறித்து நீரி என்னும் நிறுவனம் ஆய்வு நடத்தி 8 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நீரி நிறுவனம் சார்பில் இன்றும் நாளையும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வில் கலந்துகொள்ளுமாறு வைகோவுக்கும் நீரி நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.

இதை ஏற்று நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் வைகோவும் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் நேற்றும் இன்றும் ஆய்வு நடத்தினார்.

Thursday, March 31, 2011

பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடித்தாக ஆதாரம் இல்லை கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ


கன்னியாகுமரி : பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடித்ததாகவோ, அழித்தாகவோ எந்த ஆதாரமும் இல்லை என கன்னியாகுமரியில் வைகோ கூறினார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சி நேற்று மாலை கன்னியாகுமரியில் நடந்தது. நேற்று மாலை அண்ணாதுரை சிலை முன்பு இருந்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன், இலங்கை கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. வைகோ அஸ்தி கலசத்தை எடுத்து வர ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவியபடி வந்தனர். முக்கடல் சங்கமத்தில் பழ நெடுமாறன் தலைமையில் வைகோ அஸ்தியை கரைத்தார்.

பின்னர் கடற்கரையில் நடந்த அமைதி கூட்டத்தில் வைகோ பேசியதாவது;- உலகின் புகழ் பெற்ற கன்னியாகுமரி கடற்கரையின் கடல் அலையின் ஓசை இதே கடலின் மறு பக்கமான வெல்வெட்டி துறையில் எதிரொலிக்கும். உலகில் இதுவரை கண்டிராத ஆயுத போராட்டத்தை நடத்தியவர் பிரபாகரன். அவரது தாயார் பார்வதியம்மாள் சாம்பலை 31ம் நாளான கடந்த 22ம் தேதி மெரினா கடலில் தூவினோம். சிங்கள ராணுவம் பார்வதியம்மாள் இறுதி காலத்தில் கூட நிம்மதியாக சாக விடாமல் அலை கழித்து அந்த துயரத்தில் இறந்து போனார். சிதையில் கூட சிங்கள ராணுவம் மூன்று நாய்களை சுட்டு கொன்று அந்த பிணத்தை வீசியது. இதைவிட தமிழனுக்கு என்ன அவமானம் வேண்டும். இலங்கை போரில் கடைபிடிக்க வேண்டிய ஜெனிவா ஒப்பந்தத்தை கூட ராணுவம் கடைபிடிக்கவில்லை. ஆனால் பிரபாகரன் கடைபிடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறனுக்கு ஈழ தமிழர் ஒருவர் விக்லிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலை தெரிவித்தார் . இதில் சிங்கள ராணுவம் பிரபாகரனை பிடித்ததாகவோ, அழித்தாகவோ எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளது. ராஜபட்ஷே போர்குற்றவாளிஎன அறிவிக்க சர்வதேச கோர்ட்டில் வாதாடுவோம். இதற்காக போரடுவோம். பொதுமக்களை ஒன்று திரட்டுவோம். தமிழ்ஈழ போராட்டம் விரைவில் துவங்கும். இதற்காக லட்சகணக்கான இளைஞர்கள் கடல் தாண்டி செல்லும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை சாராத இளைஞர்கள், மாணவர்களை ஒன்று திரட்டுவோம். இவ்வாறு வைகோ கூறினார்.

 நிகழ்ச்சியில் ம.தி.மு.க, கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில்சம்பத், அவைதலைவர் துரைசாமி, கணேசமூர்த்தி எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் துரைபாலகிருஷ்ணன், மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜோயல், தில்லைசெல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினராஜ், கலிங்கப்பட்டி பஞ்., தலைவர் ரவிசந்திரன் உள்ளிட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ம.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

நன்றி: தினமலர்

Wednesday, March 30, 2011

நல்லது, புதிதாகத் தொடங்குங்கள் வைகோ அவர்களே!


வைகோவின் அரசியல் தற்கொலை,

தேர்தலில் தன்மானம் முக்கியமல்ல, சீட்தான் முக்கியம், சேராத இடத்தில் சேர்ந்த வைகோவுக்கு இது தேவைதான்,

திமுகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார் வைகோ, அதனால்தான் இந்த புறக்கணிப்பு,

இல்லையில்லை, ஜெயலலிதாவும் வைகோவும் பேசி வைத்துக் கொண்டுதான் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்….

- அப்பப்பா… ஆளுக்கொரு கணிப்புகள். அரசியல் படிக்க, பேசத் தெரிந்த எல்லோருமே வைகோ மீது தாங்களே ஒரு தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அவரது தேர்தல் புறக்கணிப்பு முடிவு தொடர்பாக!
உண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம் இது. வாழ்த்துகள்!

இவரைப் போன்ற ஒருவர்தான் இன்றைய தேவை.

நாணயம், யோக்கியம் போன்றவற்றுக்கு அர்த்தமே தெரியாத இன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் பெரும் தலைவர்களுக்கு மத்தியில் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற தனது கொள்கைகளை, பல்வேறு ஏளனம், கேலிகளைத் தாண்டி இன்னமும் வலுவாகப் பற்றிக் கொண்டிரு்பபவர் வைகோ, இடையில் சில தடுமாற்றங்களுக்கு ஆளானாலும்.

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறியே தீர வேண்டும். அதுதான் வளர்ச்சி அரசியல் என்று புதுப்புது இலக்கணங்கள் படைக்கும் பச்சோந்திகளைப் பார்த்தே பழகிய வாக்காளர் கண்களுக்கு, தன்மானம் முக்கியம், தொகுதிகளுக்காக தரமிழந்து கையேந்த முடியாது என சிலிர்த்துக் கொண்டு நிற்கும் வைகோ ஒரு ஆச்சர்யமாக, அல்லது பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியாகத்தான் தெரிவார். அது வைகோவின் தவறல்ல!
ஆனால் அவரை ஆரம்பமுதலே பார்க்கும் நமக்கு அப்படித் தெரியவில்லை. இத்தனைக் காலமும் சுற்றியிருப்பவர்களின் பதவி ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி, கட்சியைக் காப்பாற்றக் கருதி… சில குறைந்தபட்ச சமரசங்களோடு கூட்டணி கண்டு வந்தார் வைகோ என்பதுதான் உண்மை.

ஆனால் அப்படி பதவி ஆசைக்காக அவரை நச்சரித்து வந்த கூட்டம் இப்போது எதிர் முகாமில், வாங்கிய கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள். வைகோவுக்கு இனி இழக்க எதுவுமில்லை. ஆனால் பெறுவதற்கு ‘தமிழகம்’ இருக்கிறது. இப்போது அவர் எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கலாம். அதற்கு இப்போது அவருக்குக் கிடைத்துள்ள சுயமரியாதை மற்றும் யோக்கியர் என்ற இமேஜ் பெருமளவு உதவும்.

இன்றைய தேதிக்கு திமுக – அதிமுக கூட்டணிகளின் சந்தர்ப்பவாதங்கள், சர்வாதிகார்ப் போக்குகள் மற்றும் ஊழல்களைப் பார்த்து வெறுத்துப் போன பெரிய இளைஞர் கூட்டத்துக்கு லேசான நம்பிக்கைக் கீற்று வைகோ மூலம் தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் மிகையல்ல.

இந்த இளைஞர்களை மதிமுகவின் தொண்டர் பலமாக மாற்றிக் கொள்வதுதான், வைகோவின் அடுத்த கட்ட இலக்காக இருக்க வேண்டும். அதுவே, மதிமுக என்ற மாற்று அரசியல் சக்தியை நிலைநிறுத்த உதவும். நல்ல படிப்பாளி, நிர்வாகம் தெரிந்தவர், தொண்டர்களிடம் ஆளுமை மிக்க தலைவர், உண்மையான இன உணர்வாளர் என இத்தனை சிறப்புகள் இருந்தும் இவரால் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்க முடியாமல் போனது தமிழக வாக்காளர்களின் துரதிருஷ்டம்.

இந்த நேரத்தில் அவருக்கு ஒரு முக்கிய கோரிக்கையையும் தமிழக மக்கள் சார்பில் வைக்கலாம். ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் மனிதாபிமானி என்ற பெயரைப் பெற்ற வைகோ, இனி இங்குள்ள பிரச்சினைகளிலும் முழுவீச்சில் களமிறங்க வேண்டும்.

அடுத்த தேர்தலில் போட்டியிடுகிற அணிகளுள் வைகோவின் தலைமையிலான மதிமுக அணியும் ஒன்று என்ற நிலைக்கு அவர் இப்போதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளமே, அதிமுக கூட்டணியிலிருந்து அவர் விலகி நிற்பது. தாமதம் என்றாலும், இது சரியான முடிவுதான்.

இந்தத் தேர்தலில் எடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட கள ஆய்வு முடிவுகள் சில, வைகோவைப் பிரிந்த அதிமுக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்திக்கப் போகிறது என்று கூறுகின்றன. தேர்தல் களத்துக்கு வெளியில் நின்றாலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற சக்தியாகத் திகழ்கிறார் வைகோ என்பதற்கு இதுவே சான்று. இதுதான் வைகோவை பெரும் சக்தியாக மாற்ற உதவும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லை… ஆனால் ஆளுங்கட்சியாகும்போது ‘ராசியான நிறங்கள்’ மட்டுமே வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதானால்தான் இத்தனை நாள் அவருக்கு கவசமாகத் தெரிந்த வைகோவின் ஈழ ஆதரவுக் குரல், இப்போது கசக்கிறது.

அரசியல் களத்தில் வைகோவை வீழ்த்துவதையே தனது கடமையாகக் கொண்டு காய் நகர்த்தி வருகிறது திமுக. ஜெயலலிதாவும் இதில் கருமமே கண்ணாக இருக்கிறார். பணத்தை வாரி இறைத்தேனும் அவரை விருதுநகரில் தோற்கடிக்கிறது காங்கிரஸ்.

வைகோவைத் தோற்கடிக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட பெரும் ஆலைகளின் முதலாளிகள் பல கோடிகளை வாரியிறைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றால், இவர்களின் கொள்ளைகளுக்கு வைகோ எந்த அளவு இடையூறாக இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா!

ஆக, அவர் நாடாளுமன்றத்துக்கோ, சட்டமன்றத்துக்கோ வந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பத் தெளிவாக உள்ளார்கள். காரணம் வைகோவின் கேள்விகள் தங்களை நோக்கிப் பாயும் என்ற பயம். நேர்மையாளனைப் பார்த்து பயப்படுபவர்கள் யாராக இருப்பார்கள்… பரம அயோக்கியர்கள்தானே!

நல்லது, புதிய தொடக்கத்துக்கு வாழ்த்துக்கள் வைகோ அவர்களே!

நன்றி: -வினோ, என்வழி இணையதளம்

பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்; பரிசுத்தமானதை பாவிக்குக் கொடாதேயுங்கள்

மார்ச் 02, 2011
நாஞ்சில் சம்பத் ( ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலாளர் )


ஏப்ரல் திங்களில் தமிழகம் சட்டமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
நாட்டு மக்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் காவுகேட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்து தன்னையும் பல்கி பெருக்கிக் கிடக்கும் தனது குடும்பதையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிற ஒரு அபூர்வப் பிறவி ஆறாவது முறையாகவும் அன்னைத் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர, அதற்கான அடிப்படை வேலைகளில் ஆளும் தரப்பினர் இப்போதே ஈடுபடத் துவங்கியுள்ளனர். கொள்ளையடித்துக் குவித்து வைத்திக்கிற கோடிப் பணங்களைக் கொட்டிச் செலவழித்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டைத் தன் குடும்பத்தின் வேட்டைக்காடாகத் துடிக்கிற சுயநலச் சுனாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும். வரும் தேர்தலில் குலத் துரோகம் செய்கிற இந்தக் குடும்பத்தை தமிழக வாக்காளர்கள் ஓரங்கட்டாவிட்டால் தமிழகம் சாரம் இழக்கும். சத்தியிழக்கும் வருங்காலச் சந்ததி வாழ்விழக்கும் தமிழ்க் குடும்பங்கள் தத்தளிக்கும் தடுமாறும். ஒரு குடும்பம் ஓகோ என்றிருக்கும். ஆகா நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நாளெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியது வரும். கவலைப்பட வேண்டியது வரும்.

அதிகாரத்திற்கு வருகிறவர்களுக்கு அந்த நாளில் அண்ணல் காந்தியடிகள் சொன்ன அறிவுரையை இந்த நாளில் நினைவு படுத்துவோம். ‘ஏழ்மையை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்தப் பதவிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை மறவாமல் செயற்படுங்கள்‘ நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் ஒரு அரசாங்கம் இயங்குகிறது என்பதை அண்ணா அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையில் தெளிவுபடுத்தினார். “முழுவயிறு காணாதார் முதுகெலும்பு முறிய பாடுபடுவோர், வாழ்வின் சுவைகாணார், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர் - இவரெல்லாம் தருகின்ற வரிப்பணம்தான் கோட்டையாக் கொடிமரமாய் பாதையாய் பகட்டுகளாய் அமல் நடத்தும் அதிகாரிகளாய் அறிவு பெற அமையும் கூட்டங்களாய் அமைகின்றன” என்றார் அறிஞர் அண்ணா. அண்ணல் காந்தியடிகளின் அறிவுரையும், அறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும் இன்றைய ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு இருந்தால் நாடு நாடாக இருந்திருக்கும். காடாக மாறியிருக்காது கவலை மிகுந்திருக்காது.

வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்தார்கள். அரசியல் செய்ய வந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து. யாரை மனதில் வைத்து இப்படி எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் ஆதாயச் சூதாடிகளால் இன்று அரசியல் வியாபாரம் ஆகி விட்டது. விதியற்றவர்களாய், கதியற்றவர்களாய் மக்கள். இந்த மதோன்மத்தர்களின் கோரப்பிடியில் இருந்து நாட்டை மீட்க வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தை ஏந்த மக்கள் அணியமாக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

ஒரு கிண்ணத்தில் மட்டுமே அமுதம் நிரம்பி வழிகிறது. ஒரு தோட்டத்தில் மட்டுமே தென்றல் காற்று திரும்பத்திரும்ப வீசுகிறது. ஒரு நத்தவனத்தில் மட்டுமே மலர்கள் மலர்ந்து சிரிக்கின்றன. ஒரு கருணை இல்லாத குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் மந்தகாசப் புன்னகையில் மல்லாந்து கிடக்கிறது.

ஒரு குடும்ப ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எதிராக குவலயத்தில் அங்கிங்கெனாதபடி புரட்சிகள் சூல்கொண்டு வருகின்றன. நைல் நதிக்கரையில். நாகரீகத்தின் தொட்டில் பூமியில், பிரமிடுகளின் தேசத்தில், அய்யாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னால் ரோம சாம்ராஜ்யத்திற்கு தானியங்கள் வழங்கிய வளமார்ந்த பூமியில் நாசரின் எகிப்தில் முப்பது ஆண்டுகாலம் எகிப்து மக்களை ஏய்த்து, ஏமாற்றி, உண்டு கொழுத்து, உல்லாசம் அனுபவித்து, ஊரெல்லாம் வளைத்துப்போட்ட ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் வெசுவியஸ் எரிமலையாய் வெடிக்கிறார்கள் ஊடகத்தில் ஹோஸ்னி முபாரக்கின் அத்துமீறலை அம்பலப்படுத்திய காலித் சையத் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டான்.

காலித் சையத்தின் மரணம் எகிப்து மக்களின் நெஞ்சத்தில் ரணத்தை உருவாக்கியது. அது போர்குணமாக உருவெடுத்தது புகழ்பெற்ற தாரீர் சதுக்கத்தில் இருபது லட்சம் மக்கள் பதினெட்டு நாட்கள் திரண்டார்கள். நாயே நாட்டைவிட்டு வெளியேறு என்று திசையதிர மூரி முழங்கினார்கள். மக்களின் உள்ளத்தில் பொங்கியெழுந்த கோபத்திற்கு ஈடு கொடுக்க முடியாத ஹோஸ்னி முபாரக் குடும்பத்தோடு கெய்ரோவில் இருந்து வெளியேறி விட்டான். எகிப்தில் நின்று நிலவிய ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. மக்களின் விழாவிற்கு விடை கிடைத்தது.

எகிப்தில் புரட்சி வெடித்ததற்கும் ஹோஸ்னி முபாரக் வெளியேறியதற்கும் டுனீசியாவில் ஏற்பட்ட புரட்சி தான் காரணமாக அமைந்தது. 72 வயது நிரம்பிய டுனீசியாவின் அதிபர் பெண் அலியின் ஆட்சியில் டுனீசியாவில் நொந்தார்கள். நொறுங்கிப் போனார்கள். மக்கள் அதலபாதாளத்தில் தூக்கி வீசப்பட்டார்கள். பெண் அலியின் குடும்பமோ ஆகாயத்தையே வசமாக்கிவிட்டது. டுனீசியாவிலும் புரட்சி பூத்தது. புதுமை சிலிர்த்தது. கொற்றத்தில் இருந்த கொடியவன் பெண் அலிக்கு எதிராக முகமதுவுவாசி என்ற இளைஞன் தற்கொ¬லை செய்து மாண்டான். அந்த இளைஞனின் சாவுதான் பெண் அலியின் ஆட்சியைக் காவு கேட்டது. டுனீசியாவில் இருந்து பெண் அலியும் வெளியேறி விட்டான் குடும்பத்துடன்.

பனாமாவில் இப்போது சலேவிற்கு எதிராக புரட்சி வெடித்து விட்டது. சலேவும் தாக்குப்பிடிக்க மாட்டான். அவன் ஆட்சியும் தரைமட்டமாகிவிடும் என்ற செய்திகள் காதில் தோனாய்ப் பாய்கிறது.

விடுதலை உணர்ச்சிக்கு வித்தூன்றிய மாமனிதன் உமர் முக்தார் உலவிய லிபியாவிலும் மக்கள் கிளர்ச்சிக் கொழுந்து விட்டு எரிகிறது. கடாபிக்கு எதிராக மக்கள் களத்திற்கு வந்து விட்டார்கள். லிபியாவின் தலைநகர் டிரிபோலி போர்க்களமாக விட்டது. கடாபிக்கு எதிராக மக்கள் செங்குருதி சிந்த சித்தமாகி விட்டார்கள். பெங்காசி நகரம் புரட்சியாளர்கள் வசமாகி விட்டது. பொது மக்கள் காங்கிரஸ் எனும் லிபியாவின் பார்லிமெண்ட் தீக்கரையாக்கப்பட்டு விட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்கள் தீயில் தீர்ந்து கொண்டிருக்கின்றன. பெங்காசி விமானப் படைத்தளத்தைப் புரட்சியார்கள் உடைத்து நொறுக்கி விட்டார்கள். தலைநகர் டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் புரட்சியாளர்களால் இழுத்து மூடப்பட்டுவிட்டது. சிட்ரோ, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல்ஜாவியா, ஜவாரா போன்ற இடங்களில் எல்லாம் கலகக்காரர்கள் களமிறங்கி விட்டார்கள். புரட்சியாளர்கள் மீதும் தாயகத்து மண்மீதும் கொடுங்கோலன் இராஜபட்சேயைப் போல ஏவுகணைத் தாக்குதலுக்கு இராணுவத்தை ஏவி விட்ட பிறகும் புரட்சித் தீ எல்லாத் திசைக்கும் பரவுவதாக செய்திகள் வருகிறது. முட்டாள் கடாபியும் லிபியாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஐ.நாவின் மனித உரிமைப்பிரிவின் தலைவன் நவிபிள்ளை கடாபியின் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்கிற அளவிற்குக் கடாபியின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டது.

மத்திய கிழக்கில் வளம் நிறைந்த பக்ரைனிலும் புரட்சி பூத்துக் கிடக்கிறது. பக்ரைன் தலைநகர் மனாமாவின் ‘பேர்ள்’ சதுக்கத்தில் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னராட்சிக்கு எதிராக மண்ணும் விண்ணும் அதிர அன்றாடம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

மன்னராட்சி காலூன்றி இருக்கிற அரபுச் சீமையில் மக்கள் புரட்சி வெல்லுமானால் மக்களாட்சித் தத்துவம் மலர்குலுங்கும் மண்ணில் புரட்சி வெடிக்க அதிக நேரமாகாது. அதற்கான தருணம்தான் வருகிற பொதுத் தேர்தல் இந்தத் தேர்தலின் முடிவில் மாறுதலும் சாத்தியாகும். மக்களுக்கு ஆறுதலும் சாத்தியமாகும்.

தொலை நோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு வளமான எதிர்காலத்திற்கு வழி காணாமல் நிகழ்காலத்தின் கதவடைக்கிற கருணாநிதியின் காலம் தமிழக வரலாற்றில் கசப்பான காலம் களப்பிரர் காலத்தைத் தான் நினைவு படுத்துகிறது. நெஞ்சு சுடுகிறது.

மக்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்காமல் மீனைக் கொடுத்து மக்களை ஏய்க்கிற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களை ஏய்க்கவும் ஏமாற்றவும் திட்டமிடுகிறார்கள். மலைவாசியும் தொட முடியாத தூரத்தில் விலைவாசி. இதை நீ யோசி என்று சொன்னால் மக்களுக்கு வாங்கும் சக்தி வந்து விட்டது என்று முதலமைச்சர் பிலாக்கணம் பாடுகிறார். தன்மக்களைச் சொல்கிறாரா? தமிழ்நாட்டு மக்களைச் சொல்லுகிறாரா? என்பது தான் தெரியவில்லை.

ஜனநாயக பண்புக்குப் பந்தி வைக்க குடவோலை முறைகண்ட பழந்தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியில் ஜனநாயகம் கட்சியிலும் ஆட்சியிலும் சிரச்சேதம் செய்யப்பட்டு விட்டது. கட்சியின் பொருளாளர், துணைமுதல்வர் என்னும் இடத்திற்கு ஸ்டாலினைக் கொண்டு வந்த பிறகும் இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கக் கருணாநிதிக்கும் மனமில்லை. ஸ்டாலினுக்கும் குணமில்லை. தடாலடி அரசியல் நடத்துகிற கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார். என்பதை விட வேறு எந்த எந்தத் தகுதியும் இல்லாத அழகிரியை மத்திய மந்திரியாக்கிய அவலத்தை எங்கேபோய் சொல்வது அறிஞர் அண்ணாவும் அவர்தம்பி வைகோவும் அலங்கரித்த மாநிலங்களவையில் கனிமொழியை உட்கார வைத்ததன் மூலம் மாநிலங்கள் அவையே அழுக்காகிவிட்டது. கருணாநிதி குடும்பத்தைச் சார்ந்த ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரமையங்கள் தமிழகத்தைக் கயிறு போட்டுத்தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு மலிவான, மலினமான, கீழ்த்தரமான, கேவலமான, கோரமான குடும்ப ஆட்சியைக் குவலயத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. இவர்களை இன்னும் ஏன் இந்த மண்ணில் ஆள அனுமதிக்க வேண்டும் என்கிற கேள்வி தமிழக வாக்களார் மத்தியில் இன்று எழுந்து விட்டது. உண்மையைக்கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிவிடாமல் ஊரெல்லாம் மக்கள் சீறியெழத் தொடங்கிவிட்டார்கள். அச்சமும் பேழமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்ட ஊமை ஜனங்கள் தான் தமிழ் நாட்டு மக்கள் எனக் கருணாநிதி கணக்கிடுவாரேயானால் கருணாநிதியின் கணக்கை முடிக்க மக்கள் கணின்று எழுந்த விட்டார்கள் என்பதை போகப் போகப் புரிந்து கொள்வார்கள் ஆட்சியாளர்கள்.

ஒளி மிகுந்த தமிழகத்தை இருட்டில் தள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதொழில் குறுதொழிலுக்குக் கொள்ளி வைத்த ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி. வீட்டுக்கு ஒரு குடிகாரணை உற்பத்திசெய்து தாயின் கையில் 1 ரூபாய்க்கு அரிசியையும் தகப்பன் கையில் ரூ.100/- சாராயத்தையும் கொடுத்தது சாதனையா? வேதனையா?

பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாக இருந்து ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரையே அவர் வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லுகிறார்கள் என்றால் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது உயர்நீதிமன்ற நீதியரசர்களும் இந்த நீசனின் ஆட்சியில் தாக்கப்படுகிறார்கள் என்றால் ஆழ்வார்க்குறிச்சியில் பட்டப்பகலில் மந்திரிகள் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள் என்றால் காலையில் பட்டாம் பூச்சி போல் பள்ளிக்குப் பறந்து சென்ற குழந்தை மாலையில் வீடு திரும்புவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றால் இந்தியாவில் இதைவிட இழிவான கேடு கெட்ட ஆட்சி வேறெங்கும் இல்லை.

ஆளப்படுகிற மக்கள் வசதியாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் வசந்தம் கோலம்போட வேண்டும் என்றால் ஆளுகிறவன் ஏழையாக இருக்க வேண்டும். இங்கே ஆளப்படுகிற இலவசத்திற்குக் காத்திருக்கிற யாசகர்கள் ஆளுகிறவர்கள் என்ஜினியர்கள் கல்லூரி தாளாளர்கள். மேலாளர் நாகரிகம் நிலவிய நாட்டில் இப்போது தாளாளர் நாகரிகம் தலைதூக்கி விட்டது.

இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய எஜமானியின் காலில் விழுந்து கிடக்கும் இந்த அடிமைக் கூட்டத்தை, அலைவரிசையில் தன் கைவரிசையைக் காட்டி தேசப்பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆபத்தான மனிதர்களை, பட்டப்பகலையே பட்டாபோடும் இந்த பகல் கொள்ளையர்களை, வலிக்காமலேயே ரத்தம் உறிஞ்சுகிற இந்த நவீனரக ஓட்டுண்ணிகளை, பண்பாட்டு அடித்தளத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடுத்திருக்கிற குலக்கேடர்களை வேரோடும் தூரோடும் வெட்டிச் சாய்க்கிற வேள்வியில் வெற்றி பெற்றால் தான் நாடு நாடாக இருக்கும்.

ஜனநாயக தேவதையின் துகிலுரிந்த இந்த நவீன துச்சாதனர்களின் இருந்து, 1,01,541/- கோடிக்கடன் வாங்கி நிர்வாகத்தை நிர்வாணமாக்கிய விவேகம் கெட்டவர்களிடம் இருந்து, தீர்ந்து போகாத திராவிட இயக்க இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் கொள்கைத் துரோகிகளிடம் இருந்து, வாரிசு அரசியல் என்னும் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட மரபார்ந்த தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்கு தமிழர்களே தயாராகுங்கள். தாமதித்தால் எதுவும் நேராமலும் போகலாம். நல்ல நேரமிது நழுவ விடாதீர்கள்.

நன்றி: தினமலர் மார்ச் 02, 2011

ம.தி.மு.க., குளத்தில் கல்லெறிந்தவர்கள்


நான் 1996ல் ரஜினியை அவரது வீட்டில் போய் சந்தித்து இரண்டரை மணி நேரம் பேசினேன். அப்போது நான் ஏன், தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்டேன் என்றும் சொன்னேன். "நீங்கள் கட்சி துவக்குவதாக இருந்தால் துவக்குங்கள். நீங்கள் அரசியலுக்கு வாருங்கள். உங்கள் பெயரை சொல்லி, உங்கள் மன்றத்தின் பெயரை சொல்லிக்கொண்டு பலனை யாரோ சுரண்டிக்கொண்டு போவதற்கு அனுமதிக்காதீர்கள்' என்றும் சொன்னேன்.

"நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். ஒரு வாரத்தில் அமெரிக்கா போகிறேன்' என, ரஜினி சொன்னார். தேர்தலில் கம்யூனிஸ்ட்டுடனும், ஜனதா தளத்துடனும் கூட்டணி அமைத்து போட்டியில் குதித்தோம். தி.மு.க.,- அ.தி.மு.க.,வுக்கு இணையாக ம.தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது.

திடீரென மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவக்கி தி.மு.க.,வுடன் கூட்டு வைத்ததாலும், அருமை நண்பர் ரஜினிகாந்த், அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி விமான நிலையத்தில், "அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது' என ஜெ., ஆட்சி குறித்து பேட்டி கொடுத்ததும், ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.

தேர்தலில் தி.மு.க., - த.மா.க., கூட்டணி வெற்றி பெற்றது. மூப்பனார் புதிய கட்சி துவங்காமல் இருந்திருந்தால், ரஜினி பேட்டி கொடுக்காமல் இருந்திருந்தால், அந்த தேர்தலில் ம.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்றிருக்கும்.

அது குறித்து நான் வெளியிட்ட அறிக்கையில், "மிகப்பெரிய வெள்ளத்தில், சில சந்தன மரங்களும் அடித்து செல்லப்படலாம். ம.தி.மு.க., என்ற இந்த சந்தன மரம், வளர்ந்தாலும், வெட்டப்பட்டாலும் மக்களுக்கு பயன் தந்துகொண்டே தான் இருக்கும்.

-ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ "டிவி' பேட்டியில்

தி.மு.க-வின் கெளரவம்.. அதி.மு.க-வின் அனுதாபம்.. ம.தி.மு.க-வின் வளர்ச்சி..

நாடு சுற்றும் நாஞ்சில் சம்பத் கணிப்பு!

''இந்தத் தேர்தலில் நாங்கள் கண்ணீரை விதைத்து இருக்கிறோம். 'கண்ணீரை விதைத்தவர்கள் கம்பீரமாக அறுவடை செய்வார்கள்’ என்பார்கள். வானம் அழுதது... மழை பிறந்தது. சிப்பி அழுதது... முத்து பிறந்தது. மலர் அழுதது... தேன் பிறந்தது. வைகோவின் வாஞ்சை மிகுந்த சகாக்களாகிய நாங்கள் அழுகிறோம்... சீக்கிரமே வெற்றி பிறக்கும்!'' - வலியையும் வலிமையையும் ஒருசேரச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்.

 ''பேட்டி...'' என்றதும், ''மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நிற்கிறேன். வர முடியுமா?'' எனக் கேட்டார். தேர்தல் களத்தில் வைகோவின் வலது கரமாகச் சுற்றிச் சுழலவேண்டியவர், கடற்கரையில் காற்று வாங்க நிற்பது காலம் செய்த கொடுவினை!

மனதில் தோன்றியதைப் பகிர்தலாகச் சொன்னபோது, ''கொடுவினை செய்தது காலம் அல்ல... கூட்டணித் தலைமை! இத்தனை ஆண்டு காலம் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தோமே... அந்த நேர்மைக்குக் கிடைத்த நெருக்கடி. சமயம் பார்த்துக் கிடைக்கிற இடத்தில் துண்டுபோடவும், யாரையும் துண்டு போடவும் தெரியாத எங்களின் சாலச்சிறந்த தலைவனுக்கு அரசியல் அற்பர்கள் கொடுத்த பரிசு!
ஆனாலும், கல்லூரிக் காலத்தில் இருந்து என் தலைவனுக்கு ஆட்பட்டவனாகச் சொல்கிறேன். வைகோ இப்போது அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் இப்போது அனுபவிக்கும் குதூகலத்தை இதுவரை நான் கண்டது இல்லை. உத்வேகமான உற்சாகம் அவரிடம் கொப்பளிக்கிறது. புதிய சமவெளிக்கு - பூலோக சொர்க்கத்துக்கு வந்ததுபோல், எங்கள் தலைவர் எழுச்சி பெற்று இருக்கிறார். எத்தகைய இக்கட்டுகளையும் ஒரு நொடியில் இறக்கிவைத்து புத்தெழுச்சி பெற, தாயின் தலைமாடு போதும் என் தலைவனுக்கு!'' என்கிறார் சம்பத்!

''அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலக வேண்டிய கட்டாயத்தின் உண்மையான பின்னணி என்ன?''
''கடந்த தேர்தலில் இருந்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் எங்களை முதல் ஆளாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடாதபோதே, எங்களுக்குள் சிறு சந்தேகம் எழுந்தது. 'வைகோவைக் கூட்டணியில் வைத்திருக்காதீர்கள்’ என்பது கடல் கடந்து வந்த கட்டளை என்றே தோன்றுகிறது. அதேபோல், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தலைவர் வைகோ நடத்தும் சட்டப் போராட்டமும் பலரை சங்கடத்தில் ஆழ்த்தியது. ஸ்டெர்லைட் நிறுவனர் அகர்வால், தலைவர் வைகோவிடம் பல விதங்களிலும் சமாதானத்துக்கு மெனக்கிட்டார். தலைவர் எந்த விமானத்தில் செல்கிறார் என்பதை அறிந்து பக்கத்து ஸீட்டில் பய​ணித்து, 'ஐந்து நிமிடங்கள் உங்​களோடு பேச வாய்ப்புக் கொடுங்​கள்!’ எனக் கெஞ்சினார். ஆனாலும், அந்த நச்சு ஆலையை மூடும் முடிவில் கொஞ்சமும் பின்வாங்காத தலைவர், அதற்கு மறுத்துவிட்டார். சிங்கள அதிபர் ராஜபக்ஷே, 'ஸ்டெர்லைட்’ அகர்வால் உள்ளிட்ட இன்னும் சில பண முதலைகள் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிப்பதை உடைக்கத் துடித்தன. அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என நாங்களும், எங்கள் தலைவரும் நம்பினோம். ஆனால், அந்த நம்பிக்கையை அம்மையார் தவிடுபொடியாக்கிவிட்டார்!

எங்களைக் கூட்டணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே 6 தொகுதிகள் ஒதுக்குவதாகப் பேச்சுவார்த்​தையை ஆரம்பித்தார்கள். எங்கள் தகுதிக்கும் தகவுக்குமான ஒதுக்கீடா அது? கூட்டணியில் இருந்து எங்களைத் தலையைப் பிடித்துத் தள்ளவே அவர் நினைத்தார். மொத்தத்தில், 'ஜெயலலிதா பணத்துக்கு அடிமை. தலைவர் வைகோ குணத்துக்கு அடிமை’ என்பதை இந்தத் தேர்தல் களம் உலகுக்குத் தெரிவித்துவிட்டது!''

''திட்டமிட்டு ம.தி.மு.க-வை விரட்டிய ஜெ., பிறகு ஏன் வைகோ-வுக்கு கடிதம் எழுத வேண்டும்?''
''அந்தக் கடிதத்திலேயே அவர் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இறுதியில் அவர் எங்களுக்கு ஒதுக்க நினைத்தது வெறும் 12 ஸீட்கள்தான். தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்யச்சொல்லி ஜெயலலிதா அந்தக் கடிதத்​தில் ஒரு வார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. 'வை​கோ மீது நன்மதிப்பும் அன்பும் எப்போதும் உண்டு!’ என அம்மையார் எழுதியது, நாடு முழுக்க அவருக்கு எதிராக எழுந்த உணர்வுபூர்வமான கொந்தளிப்பை அடக்க எடுத்த ஆயுதம்! ஆனால், அம்மையாரின் கடிதத்தால் அடங்கிவிடக்கூடிய ஆதங்கமா அது? எரிமலையாக வெடித்துச் சிதறும் எங்களின் அடிபட்ட வலி, அவர்கள் அடிபடும்போதுதான் புரியும்!''

''கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியே தள்ளப்பட்​டதற்குக் காரணம் சசிகலாவின் உறவு வகையறாக்கள்தான் என்கிற பேச்சும் இருக்கிறதே?''
''ஜெயலலிதா அம்மையார் தன்னிச்சையாகவோ, சுதந்திரமாகவோ, எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். அதை நம்புவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை!''

''அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விஜயகாந்த்​தோ, இடது​சாரித் தலைவர்களோ கூட்டணி​யில் ம.தி.மு.க-வை நிலைக்கவைக்க முயற்சி எடுக்கவில்​லையா?''
''அவர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், அ.தி.மு.க. தலைவியைக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் சந்திக்கவோ, கருத்துச் சொல்லவோ முடியாது என்பதுதான். உயரிய பத்திரி​கைகளே அவரிடம் நேரம் வாங்க முடியாமல் அல்லாடுகின்றன. கூட்டணியில் ம.தி.மு.க. நிலைக்க வேண்டும் என யார் நினைத்து இருந்தாலும், இரும்புத் திரை போர்த்திய அந்தத் தலைவியிடம் எப்படிப் பேச முடியும்? அதனால், இதில் யார் மீதும் எங்களுக்கு வருத்தம் இல்லை!''

''17 ஆண்டுகளாகக் களத்தில் இருக்கும் ம.தி.மு.க-வை அவமானப்படுத்தியது ஒரு புறம் இருக்கட்டும்... கடந்த தேர்தலின்போது கட்சி ஆரம்பித்த விஜயகாந்த்துக்கு 41 ஸீட்கள் ஒதுக்கியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''கொள்கை சார்ந்த அரசியலை எந்த ஆதிக்க சக்தியும் ஏற்பது இல்லை என்பதைத்தான் அம்மையாரின் முடிவு அப்பட்டமாக்குகிறது. லட்சியத்தை மையமாகக்கொண்டும், இளைஞர்களையே மூலதனமாகக்கொண்டும் இயங்கும் ம.தி.மு.க-வைப்போன்ற ஏதாவது ஓர் இயக்கத்தை இந்த இந்தியத் தேசத்தில் உங்களால் உதாரணம் காட்ட முடியுமா? இதைக் கொச்சைப்படுத்துவதில் சிலர் சுகம் காண்கிறார்கள். அந்த சுகம் நிரந்தரமானதாக இருக்காது!''

''வழக்கம்போல் வைகோ உணர்ச்சிவசப்பட்டுப் புறக்கணிப்பு முடிவு எடுத்துவிட்டதாக சிலர் சொல்​கிறார்களே?''
''19-ம் தேதி கட்சியின் உயர் மட்டக் குழுவைக் கூட்டி நண்பகல் 2 மணி வரை தலைவர் வைகோ ஆலோசித்தார். அதன் பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிகாலை 3.30 மணி வரை ஆலோசித்துத்தான் தேர்தல் புறக்கணிப்பு என்கிற முடிவை தலைவர் ஏகமனதாக எடுத்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டு இருந்தால், '6 ஸீட்தான்...’ என ஆரம்பித்தபோதே அறுத்துக்கொண்டு வந்திருக்கலாமே... எங்களின் மௌனத்தை இளக்காரம் செய்பவர்களை விட்டுத்தள்ளுங்கள். 1,000 பொதுக்கூட்டங்கள் நடத்தினால்கூட கிடைக்காத எழுச்சியை எங்களின் மௌனம் இப்போது ஏற்படுத்தி இருக்கிறது.''

''தேர்தல் புறக்கணிப்பு என அறிவித்ததால், தி.மு.க-வை வீழ்த்துவதையே லட்சியமாகக்கொண்ட உங்களுக்குப் பின்னடைவுதானே?''
''கலைஞர் மறுபடியும் முதல்வர் ஆவதில் எங்களுக்கு இம்மியளவும் உடன்பாடோ, மகிழ்வோ இல்லை. ஆனால், ஜெயலலிதா இப்படிப் பழிவாங்கிவிட்டாரே என்கிற வேதனை கடைக்கோடித் தொண்டர்கள் வரை நீடிக்கிறது. யாரை வீழ்த்த வேண்டும், யாருக்கு நம் வல்லமையைப் புரியவைக்க வேண்டும், யாரைக் கருவறுக்க வேண்டும் என்பதெல்லாம் ம.தி.மு.க. உறுப்பினர்களின் மனசாட்சிக்கே தெரியும்! இந்தத் தேர்தலில் நிச்சயம் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் முடிவுகளில்தான் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரியும். இதுவரை தமிழகத்தில் நிகழாத தொங்கு சட்டமன்றம்தான் இந்தத் தேர்தலில் அமையும். அதன் ஆயுள் மிகக் குறைவானதாக இருக்கும். பீகாரைப்போல் மிகக் குறைந்த காலத்துக்குள்ளேயே அடுத்த தேர்தலை தமிழகம் எதிர்கொள்ளும். அப்போது மாற்று சக்தியாக ம.தி.மு.க. வல்லமையோடு களத்தில் நிற்கும்!''

''முதல்வர் கருணாநிதி, 'வரிப் புலியே வருக’ என வைகோ-வை சூசகமாக அழைத்திருக்கிறாரே?''
''கலைஞரின் பாச வலையில் வைகோ ஒரு போதும் சிக்க மாட்டார். எங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டும், தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் எடுத்த முடிவும் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஒரு கௌரவத்தை எங்களுக்கு உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அனுதாபத்தையும், பொதுமக்களிடத்தில் பச்சாதாபத்தையும், உலகத் தமிழர்கள் மத்தியில் உயரிய நன்மதிப்பையும் உண்டாக்கி இருக்கிறது. இதை அறுவடை செய்ய அவர்கள் முயலத்தான் செய்வார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் பலிக்காது. இது நாள் வரை நாங்கள் விதைத்தோம். ஆனால், அறுவடை செய்யவில்லை. நாங்கள் நெய்தோம். ஆனால், உடுத்தவில்லை. இனி அப்படி இருக்க மாட்டோம். நாங்கள் விதைத்தை நாங்களே அறுவடை செய்வோம். இதில் ஊடுருவ கலைஞர் நினைத்தாரேயானால், அந்த முயற்சியில் அவர் தோற்பது உறுதி. தான் கொள்ளையடித்து வைத்திருக்கும் சொத்துகள் பறிபோகப் போகிறதோ என்று பயப்படுகிறார் கலைஞர். அதனால், காவல்காரர்களைத் தேடுகிறார். அன்புக் கடிதம் எழுதியவர்களுக்கும், ஆசை அழைப்பு விடுப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது... இழவு வீட்டில் களவு கூடாது!''

- இரா.சரவணன், படங்கள்: கே.கார்த்திகேயன்

Tuesday, March 29, 2011

இரும்புத் திரைக்குள் மாட்டிக் கொண்டுபால்கனி அரசியல் நடத்தும் ஜெ.,!வெடிக்கிறார் நாஞ்சில் சம்பத்


வைகோவின் மனசாட்சி எனும் அளவுக்கு, அவருடன் நகமும் சதையுமாக இருப்பவர் சம்பத். 2006ல் தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., வெளியேறும் முன்னரே, தன் மேடை முழக்கங்கள் மூலம் அதை கட்டியம் கூறியவர். இம்முறையும், விரிசல்கள் வெளியில் தெரியும் முன்னரே, அ.தி.மு.க., தலைமையை தஞ்சைத் தரணியில் போட்டுத் தாக்கிவிட்டார். அவர் சொன்னது போலவே அமைந்தன முடிவுகள்.

அடுத்தது என்ன?இப்படி ஒரு அதிர்ச்சி முடிவு எடுத்திருப்பது சரி தானா?
இது கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்ல... ம.தி.மு.க.,வினருக்கும் தவக்காலம் தான். ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணிக்கு, வைகோவின் தவம் கலையும். எங்கள் மவுனம் வலிமையானது. அமெரிக்காவின் சிகாகோ நகரில், மேதின நினைவரங்கில், "சப்தத்தை காட்டிலும் மவுனம் வன்மையானது' என்ற பொன்மொழி எழுதிவைக்கப்பட்டுள்ளது. மவுனம் வன்மையானது என்பதை, தமிழக தேர்தல் முடிவுகள் ஊருக்கு உணர்த்தும். ஆயிரம் கூட்டங்களில் பேசினாலும் வைகோவிற்கு கிடைத்திராத மரியாதை, தற்போதைய மவுனத்தால் ம.தி.மு.க., பெற்றிருக்கிறது.ஒரு புதிய திசையை நோக்கி எங்கள் பயணம் தொடர்வதற்கு, ஒரு வாசலை திறந்து வைத்த ஜெயலலிதாவை, வாசனை மலர்களைத் தூவி வணங்குகிறேன்.

ஜெயலலிதாவின் இந்த முடிவால் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எங்களுக்கு அனுதாபமும், தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எங்களுக்கு கவுரவமும், பொதுமக்கள் மத்தியில் எங்கள் மீது பட்சாதாபமும், உலகத் தமிழர்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் ஜார் மன்னனை வீழ்த்துகிற புரட்சிக்கு அடித்தளம் அமைத்த மாவீரன் லெனின், "முன்னே ‌செல்ல ஒரு காலடி தூரம் எடுத்து வைக்க இடம் கிடைத்தால் போதும்' என்றான். ம.தி.மு.க.,வின் 17 ஆண்டுகால பயணத்தில், எங்களுக்கு முன்னே செல்ல, இப்போது ஒரு அடி எடுத்து வைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

துப்பாக்கியின் ஓசையை விட அதிகமாகவும், பூகம்பத்தின் சீற்றத்தை விட அதிகமாகவும், புயலின் வேகத்தைவிட வேகமாகவும் எங்கள் பயணத்தை மேற்கொள்வோம். தமிழகத்தில் இதுவரையிலும் மாற்றுக் குறையாத சக்தியாக இருந்த நாங்கள், இனி மாற்று சக்தியாக மாறுவோம். "அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நான் தான் மாற்று அணி' எனக் கூறிவந்த கேப்டன், இப்போது சிப்பாய் ஆகி சீரழிகிறார்.ஒருவேளை அ.தி.மு.க., அதிகாரத்திற்கு வருமானால் ஜெயலலிதா, தி.மு.க.,வை எல்லா தளங்களிலும் தீர்த்துக் கட்டுவார். தி.மு.க., ஆட்சிக்கு வருமானால், அ.தி.மு.க.,விற்கு முடிவுரை எழுதுவர். இந்தத் தேர்தல் முடிவில், இரண்டு தீயசக்திகளில் ஏதாவது ஒரு தீயசக்தி அழியப் போகிறது என்பது மட்டும் உண்மை. ஒரு சக்தி அழியும் போது, இட்டுநிரப்புகிற அரசியல் ஆளுமையும், அதற்கான ஆற்றலும், தமிழக அரசியலில் வைகோவிற்கு மட்டும் தான் உண்டு.

தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஜாதிக்கட்சிகளை நம்பித்தான் களத்தில் நிற்கின்றனர். தமிழக அரசியலில் எங்கள் வியர்வை, அடுத்தவர்களின் பாசனத்திற்கு பயன்பட்டிருக்கிறது. நாங்கள் விதைத்தோம்; ஆனால் அறுக்கவில்லை. நாங்கள் நெய்தோம்; ஆனால் உடுத்தவில்லை. நாங்களே நெய்து நாங்களே உடுத்தவும்; நாங்களே விதைத்து நாங்களே அறுக்கவும், காலம் ஒரு சந்தர்ப்பத்தை வைகோவிற்கு வழங்கியிருக்கிறது.அ.தி.மு.க.,வில் நடப்பதை வைகோவால் எப்படி கணிக்க முடியாமல் போனது?ஜெயலலிதாவின் இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகத் தன்மையை, எங்களால் முன்கூட்டியே உணர முடியவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பேசிய அ.தி.மு.க., குழுவினர் ஆறு இடங்களைத் தான் தரமுடியும் என்றனர். வாதத்திற்கு கேட்பதானால், 1996 தேர்தலில் அ.தி.மு.க., நான்கு இடங்களில் தான் வெற்றி பெற்றது. எனவே, நீங்கள் நான்கு இடங்களை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூற முடியுமா?

தூத்துக்குடி தனியார் ஆலை நிர்வாகம் தான் ம.தி.மு.க.,வை கூட்டணியில் இருந்து கழற்றிவிட பல கோடிகள் தந்ததாக பேச்சு எழுகிறதே?
கப்பலோட்டிய தமிழன் வாழ்ந்த தூத்துக்குடியில், அபாயத்தை கக்குகிற ஸ்டெர்லைட் நச்சு ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் கசிவு ஏற்பட்டால், அதை சரி செய்ய தொழில்நுட்ப வசதிகள் இந்தியாவிலேயே இல்லை. அறிவியல் துறையில்முன்னேறிய ஜப்பான் நாடே அணுக்கசிவால் திக்குமுக்காடுகிறது. எனவே தான், அந்த ஆலைக்கு எதிராக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம் சென்றோம். ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வைகோ நேரடியாக ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வரை ‌சென்று, அந்த ஆலையை இழுத்து மூட உத்தரவுகள் பெற்றோம்.

அந்த நாசகார கும்பலால் வைகோவை இழுக்கவும் முடியவில்லை; ஈர்க்கவும் முடியவில்லை. எனவே வைகோவின் குரல் சட்டசபையில் ஒலிக்க இருப்பதைத் தடுப்பதற்காக, அந்த நிறுவனத்தின் பணம் பல கோடி ரூபாய், போயஸ் தோட்டத்து சீமாட்டியிடம் சிக்கிக் கொண்டது. பணத்திற்கு அரசியல் செய்யாத, குணத்திற்கே அரசியல் செய்கிற வைகோ, திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார். "தொட்டான் பாஞ்சாலியை... கெட்டான் துரியோதனன்' என்பதைப் போல, "விட்டார் வைகோவை, கெட்டார் ஜெயலலிதா' என்பதைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

ம.தி.மு.க., மற்றும் வைகோ ஆதரவாளர்களின் ஓட்டு யாருக்கு என்பதை எப்போது சொல்வீர்கள்?
யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது, வைகோவின் ஆதரவாளர்களுக்குத் தெரியும். காங்கிரசுக்கு பதிலடி தர வேண்டும் என 63 தொகுதிகளில் களம் இறங்கினால், அங்கு ஓட்டுகள் சிதறி காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும். தனியாக போட்டியிட்டால், யாரிடமாவது பெட்டி வாங்கி போட்டியிடுகின்றனர் என, பெட்டி வாங்கியே பழக்கப்பட்டவர்கள், எங்கள் மீது பழி öŒõல்லக்கூடும். நாங்கள் காசற்றவர்கள் மட்டுமல்ல... மாசற்றவர்கள். எனவே தான், ம.தி.மு.க.,விற்கு புதிய வலுவும், பொலிவும் களம் காணாமலேயே வசமாகியிருக்கிறது. வைகோ தமது முடிவை ஏப்ரல் 11ம் தேதி மாலையில் அறிவிப்பார்.

"புறக்கணிக்க வேண்டாம்' என இன்று குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க.,விற்கு உரிய சீட்டை வழங்கும்படி ஜெ.,விடம் பேசவில்லையே என்ற வருத்தம் உள்ளதா?
"நோ காம்ப்ரமைஸ்' என கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட்கள், ஒரே நாளில் ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்ததை, இந்த நாடு பார்த்தது. எனவே தான், கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் விஷப் பரீட்சையில் வைகோ இறங்கவில்லை. எங்களை நாங்களே சுத்திகரித்துக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும், சுய பரிசோதனை செய்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எங்களது சீட்களுக்காக கம்யூனிஸ்ட்களாவது ஜெயலலிதாவிடம் பேசுவதாவது... இரும்புத் திரைக்குள் மாட்டிக்கொண்டு பால்கனி அரசியல் நடத்தும் அந்த அம்மையாரைச் சந்திப்பதும், கருத்து தெரிவிப்பதுவும் விஜயகாந்தோ, கம்யூனிஸ்ட் தலைவர்களோ அல்ல, ஐ.நா., சபை தலைவர் பான் கீ மூனால் கூட முடியாத விஷயம். அப்படியே கம்யூனிஸ்ட்கள் அந்த அம்மையாரிடம் கேட்டாலும் கூட, எதுவும் நடந்திருக்கப்போவதில்லை.

வைகோ குறித்து ஜெ., உருக்கமான அறிக்கை வெளியிட்டாரே?கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு முறையாக சீட் ஒதுக்கும் முன், 160 தொகுதிகளுக்கும் தான்தோன்றித்தனமாக வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்தபோதே எங்களுக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டதை உணர்ந்தோம். ஜெயலலிதாவின் அறிக்கையில் வைகோவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இல்லையே. எனவே, இது திட்டமிட்டுத் தான் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். நாங்கள் கண்ணீர் வடிப்பதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால், "கண்ணீரோடு விதைப்பவர்கள்; கம்பீரத்தோடு அறுவடை ‌செய்வர்' எனும் விவிலியத்தின் வரிகள், தேர்தல் முடிவுகளின் போது அம்மையாருக்கு உணர்த்தும். சிறைச்சாலை செல்வது மட்டுமல்ல தியாகம்.

இது போல அவமானங்களை தாங்கிக் கொள்வதும் தியாகம் தான். எங்களை அவமானப்படுத்திவிட்டதாக அவர்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அவர்களின் கணக்கை முடிக்கிற காலம் எங்களுக்கு வரும். வைகோ வெல்வது உறுதி... வரலாற்றுக்கு இல்லை மறதி. வைகோவின் விஸ்வரூபத்தை இனிமேல் தான் பார்க்கப் போகிறோம்.""கம்யூனிஸ்ட்கள், ஒரே நாளில் ஜெ.,விடம் சரணாகதி அடைந்ததை, இந்த நாடு பார்த்தது. எனவே தான், அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் விஷப்பரீட்‌சையில் வைகோ இறங்கவில்லை''

நன்றி: தினமலர்

அன்னை பார்வதியின் ஈமச்சாம்பல் குமரி கடலில் கரைப்பு! வைகோ, பழ.நெடுமாறன் பங்கேற்பு!


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் ஈமச்சாம்பலை கன்னியாகுமரி கடலில் கரைக்கும் நிகழ்ச்சி மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசின் கொடிய அடக்குமுறைக்கும், இனக்கொலைக்கும் ஆளாக்கப்பட்டு, அடிமை நுகத்தடியைச் சுமக்க நேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகத்தை, சுதந்திரத் தமிழ் ஈழ தேசமாக அமைத்திட, உலகமே அதிசயிக்கும் விதத்தில் விடுதலைப் போர் நடத்திய மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைப் பெற்ற அருமை அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார்.

வல்வெட்டித்துறையில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ள நமது அன்னையின் ஈமச்சாம்பலை, மூன்று கடல்கள் சங்கமிக்கும் குமரி முனையில், கடல் அலைகளில் தூவி, நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, அன்னையார் மறைந்த 40ஆம் நாளாகிய மார்ச் 31 வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது. நானும், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கு ஏற்க இருக்கின்றோம்.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப்பொதுச்செயலாளர்கள், நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளை, குமரி மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. செயலாளர் தில்லை செல்வம் அவர்களும், கழக நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

கழகக் கண்மணிகளும், தமிழ் ஈழ ஆதரவாளர்களும் பெருமளவில் இந்த நிகழ்ச்சியில் பங்கு ஏற்குமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நன்றி: நக்கீரன்

Monday, March 28, 2011

‘‘யாரை வீழ்த்தவேண்டும் என்று ம.தி.மு.க.வினருக்கு தெரியும்!’’ - நாஞ்சில் சம்பத்



அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. கழட்டி விடப்பட்டதும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் ம.தி.மு.க. தொண்டர்கள். ‘‘இந்த முறை மட்டும் ம.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்கிறது...’’ என்று சொல்லிவிட்டு வைகோ ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

இருந்தாலும், கொந்தளித்து எழும் ம.தி.மு.க. தொண்டர்கள், அ.தி.மு.க.வுக்கு எதிராக வார்த்தை வீச்சுக்களை ஆங்காங்கே நடத்திக் கொண்டி-ருக்-கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்-படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்தாண்டு காலமாக பட்டி தொட்டியெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்துதான், உச்ச-பட்ச கொந்த-ளிப்பில் இருக்கிறார்.

அவரிடம் சில கேள்விகள்...

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகி வருவதற்கு தொகுதி பங்கீடு பிரச்னைதான் பிரதான காரணமா?

நாங்கள் திட்டமிட்டு வெளியேற்றப் பட்டி-ருக்கி-றோம். இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. எங்களை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்கு கடல் கடந்து தீட்டப்பட்ட திட்டம் தான் பிரதான காரணம். அந்த திட்டத்தின் பலனாக பல ஆயிரம் கோடிகள் கைமாறி இருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்-திருக்கிறது.

கேட்கவே பயங்கரமா இருக்கே... அப்படி என்னதான் திட்டம் தீட்டப்பட்டது?

இந்தத் திட்டத்துக்குள் போவதற்கு முன்பாக, விடுதலைப்புலிகள் விஷயத்தில் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கூடவே, விடுதலைப்புலிகள் இயக்கத்-துக்காக எங்கள் பொதுச் செயலாளர் வைகோ எப்படி-யெல்லாம் பாடுபட்டு வந்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தான் முதல்வராக இருந்த போது கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ரௌலட் சட்டம் பெற்றுப் போட்ட குழந்தையான பொடா சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்தார். 8-க்கு4 அளவுள்ள கொட்டடியில் அடைத்து, தன்னு-டைய இலங்கை விசுவாசத்தை உலகுக்குக் காட்டி-யவர்.

அதன்பிறகும் காலத்தின் கட்டாயம், கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டதன் விளைவு-ஜெயலலிதாவோடு கூட்டணி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தன்னுடைய ஆணவப் போக்கை ஜெயலலிதா மாற்றிக் கொண்டுவிட்டார் என்று நம்பினோம். ஆனால், நான் என்றைக்கும் மாற மாட்டேன் என்று மீண்டும் ஒருமுறை அவர் உணர்த்தி விட்டார்.

ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்-தாலும் நாங்கள் எங்கள் கொள்கைகளில் இருந்து துளியும் மாறவில்லை. விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று சொல்லி, நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தோம். அதெல்லாம் இலங்கை ஆதிக்க சக்திகளின் கையாளான ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. எங்களை எப்படி வெளியேற்றலாம் என்று காத்திருந்திருக்கிறார். தேர்தல் நேரம் பார்த்து, கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி வெளியேற்றி விட்டார்.

விடுதலைப்புலிகள் விஷயத்தில் யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத வைகோவின் குரல், சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காக ‘ரத்தக் காட்டேறி’ ராஜபக்ஷே முடிவெடுக்கிறான். அதற்காக ஒரு திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டத்தின் படி தேவைப்படுவோருக்கு எலும்புத் துண்டுகளை தூக்கிப் போடுகிறான். பெற வேண்டியவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டு, எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.

கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற்றப்-பட்டதற்கு இது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் ஸ்டெர்லைட் பிரச்னை. ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி, ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி வரையில் நடைபயணம் சென்றவர் வைகோ. நீதிமன்றம் வரை சென்றும் நியாயம் கேட்டவர். இதனால் வைகோவை பழிதீர்க்க அந்நிறுவனத்தின் சார்பிலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவர்களும் இந்த வெளியேற்றத்துக்கு பின்னணியாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்.

இதெல்லாம் வைகோவுக்கும் தெரியுமா?

அவருக்கு இருக்கும் மனச் சோர்வுக்கிடையே இதனையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வாய்ப்-பில்லை. தெரிந்தாலும், இதற்கெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். ஏனென்றால், இப்படிப்பட்ட சதிகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் அவர். ‘ஜெயலலிதா நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே...

அதிலென்ன தவறு. நடந்திருப்பது அதுதானே. ஏற்கனவே கருணாநிதி இப்படித்தான் செய்தார். அவரைவிட மோசமாக ஜெயலலிதா செய்திருக்கிறார். துரோகத்தில், நயவஞ்சகத்தில், நம்ப வைத்துக் கழுத்தறுப்பதில் இருவரும் குறைந்தவர்கள் அல்ல. அதனால்தான் அந்த இரண்டு சக்திகளுமே வீழ்த்தப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட முடிவெடுத்திருக்கிறோம்.

தேர்தல் புறக்கணிப்பு செய்துவிட்டு, அவர்களை எப்படி வீழ்த்த முடியும்?

இந்தத் தேர்தலில் அழிய வேண்டிய இரண்டு சக்திகள் மோதிக் கொண்டால், ஏதாவது ஒரு சக்தி இன்னொரு சக்தியால் வீழ்த்தப்பட்டுவிடும். அப்ப, இயற்கையாகவே அரசியலில் ஒரு காலியிடம் உருவாகும். அந்த இடத்தை இட்டு நிரப்பும் சக்தி வைகோவுக்குத்தான் உண்டு. அந்த இடத்தில் இருந்து கொண்டு விசுவரூபமெடுத்து, தேர்தலுக்குப் பிறகு மீத-மிருக்கும் சக்தியை நாங்கள் வீழ்த்திக் காட்டுவோம். விசுவரூபமெடுப்பதற்கு முன்னால் இருக்கும் தற்காலிக அமைதிதான் தேர்தல் புறக்கணிப்பு.

அ.தி.மு.க. மீதான கோபத்தில் நீங்கள் தேர்தலை புறக்கணிப்பதால், உங்கள் தொண்டர்களெல்லாம் தி.மு.க.வுக்கு ஓட்டளித்து விட மாட்டார்களா?

அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அழிக்கப்பட வேண்டிய இரண்டு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் இலக்கு. அதற்காகத்தான் நாங்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறோம். எங்கள் தொண்டர்கள் புத்திசாலிகள். இந்தத் தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்று கணக்குப் போட்டு வைத்துவிட்டார்கள். அதன்படியே வீழ்த்திக் காட்டுவார்கள்...’’

வைகோவை மறைமுகமாக தி.மு.க. பக்கம் அழைத்திருக்கிறாரே கலைஞர்?

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை கேள்வி-பட்டிருக்கிறீர்கள் தானே. அப்படித்தான் இருக்கிறது வைகோவை தங்கள் பக்கம் இழுக்க கருணாநிதி தூண்டில் போடுவதும். இதில் கூட அவருடைய சூழ்ச்சிதான் ஒளிந்திருக்கிறது. கருணாநிதியின் அழைப்புக்குப் பிறகு மனமிறங்கி கருணாநிதியை ஏற்றுக் கொள்வான் என்பதுதான், அவருடைய குள்ளநரித்தனம். அவர் அதை ராஜதந்திரம் என்று நினைத்து செய்கிறார். இந்த ஏமாற்று மொழிகளுக்கெல்லாம் ம.தி.மு.க. தொண்டன் இரையாகிவிட மாட்டான்.

தேர்தல் புறக்கணிப்பால் ம.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படாதா?

தேர்தலுக்குப் பிறகு நாங்கள் வீறுகொண்டு எழுந்து வருவோம். எங்களுக்கு ஏற்பட்ட காயங்களையெல்லாம் வீதிக்கு வீதி மக்களிடத்தில் கொண்டு செல்வோம். மறுமலர்ச்சி பயணத்தில் இப்போதுதான் புதிய வாசல் திறந்திருக்கிறது. இதை இனி சரியாகப் பயன்படுத்துவோம்!

நன்றி: தமிழக அரசியல்